Published : 21 Oct 2021 03:05 AM
Last Updated : 21 Oct 2021 03:05 AM

திரைகளால் தாமதமாகும் குழந்தைகளின் திறன் வளர்ச்சி :

இன்று யூடியூப் சேனல்கள் நடத்துபவர்களில் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. பதின்ம வயதைக்கூடத் தொட்டிராத குழந்தைகள் பலர் யூடியூப் சேனல்களை நடத்துகிறார்கள். அவற்றில் தாமே தயாரித்த காணொளிகளை வெளியிடுகிறார்கள். சிறுவர்களாக இருக்கும்போதே காணொளி உருவாக்குதல், அவற்றை இணையத்தில் பதிவேற்றுவதற்கான தொழில்நுட்ப விஷயங்களைத் தாமாகவே கற்றுக்கொண்டு தேர்ச்சிபெறுதல், ஆகியவை நம் அடுத்த தலைமுறையினரின் அறிவு வளர்ச்சியின் வேகம் குறித்து நம்மைப் பெருமிதம் கொள்ளச் செய்கின்றன. அதே நேரம், இப்படி யூடியூப் சேனல்களைத் தொடங்கி நடத்திவரும் சிறுவர்கள் பலரும் குறைந்தபட்சம் ஐந்து வயதுக்குப் பிறகே காணொளிகளைப் பார்க்கவும் உருவாக்கவும் உதவும் திறன்பேசிகளுக்கும் (ஸ்மார்ட்போன்களுக்கும்) இணையதளங்களுக்கும் பழகத் தொடங்கினார்கள். 2014-15 வாக்கில்தான், இணையத்தை அனைவரின் கைகளுக்கும் எளிதாகக் கொண்டுசென்ற திறன்பேசிகளும், மலிவுவிலை கைபேசி ‘டேட்டா பிளான்’களும் பரவலாகின. இந்த அதிவேக இணையப் பரவலாக்கத்துக்குப் பிறகு, பிறந்த குழந்தைகள் தவழ்தல், உட்கார்தல் ஆகியவற்றைக் கற்றுக்கொள்ளும் பருவத்திலிருந்தே குறிப்பாக பேசத் தொடங்குவதற்கு முன்பே திறன்பேசி, மடிக்கணினி, தொலைக்காட்சி ஆகியவற்றின் மூலம் காணொளிகளைப் பார்க்கத் தொடங்கிவிடுகின்றனர். சோறு ஊட்டுவதற்காகவும் அழுகையிலிருந்தோ பிடிவாதத்திலிருந்தோ திசைதிருப்புவதற்காகவும் நாம் வேறு வேலைகளில் கவனம் செலுத்துவதற்காகவும் பால் மணம் மாறாக் குழந்தைகளுக்குத் திரைகளை அறிமுகப்படுத்திவிடுகிறோம். ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அதிக நேரம் இப்படித் திரைகளுக்கு முன் அமர்ந்து நேரம் செலவிடுவதால் அவர்களின் பேச்சு, கவனித்தல், தகவல்களை உள்வாங்குதல் ஆகிய பல்வேறு திறன்களின் வளர்ச்சி தாமதமாவதாக உளவியல் நிபுணர்களும் குழந்தைகள் நல மருத்துவர்களும் எச்சரித்துவருகிறார்கள். இப்படித் தொலைக்காட்சி, மடிக்கணினி, கைபேசி ஆகிய கருவிகளின் திரைகளில் காணொளிகளைப் பார்த்தபடி குழந்தைகள் செலவழிக்கும் நேரத்துக்குத் திரை நேரம் (Screen Time) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் திரை நேரம் அதிகரிப்பதற்கும் குழந்தைகளின் வளர்ச்சி நிலைகள் தாமதமாவதற்கும் நேரடித் தொடர்பிருப்பது உலக அளவில் பல்வேறு ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழு ஒன்று, குழந்தைகளின் வளர்ச்சியில் திரை நேரத்தின் தாக்கம் தொடர்பான ஆய்வைத் தமிழகத்தின் நகர்ப்புற, கிராமப்புற பகுதிகளில் நடத்தியுள்ளது. இந்த ஆய்வை நடத்தியவர்கள் சென்னையில் உள்ள புகழ்பெற்ற தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகள் மருத்துவம், மனநலன், பேச்சு, மொழி மற்றும் கேட்புத் திறன் சிகிச்சை ஆகிய துறைகளில் பணியாற்றும் மருத்துவ நிபுணர்கள். ‘அதீதத் திரை நேரத்தின் பரவலும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் வளர்ச்சி தாமதமாவதில் அதற்குள்ள தொடர்பும்’ (Prevalence of excessive screen time and its association with developmental delay in children aged

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x