Published : 10 Aug 2021 03:15 AM
Last Updated : 10 Aug 2021 03:15 AM

மின்கட்டணக் கொள்ளை முடிவுக்கு வருமா? :

அரசு ஊழியர்கள் மாதாந்திர அடிப்படையில்தான் ஊதியத்தைப் பெறுகின்றனர். ஆனால், மின்சாரக் கட்டணக் கணக்கெடுப்பு மட்டும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை குறிக்கப்படுகிறது! மாதாமாதம் கணக்கெடுத்திருந்தால், ரூ.16 ஆயிரம் மட்டுமே என் வீட்டுக்கு மின்சாரக் கட்டணமாகச் செலுத்த வேண்டியிருந்திருக்கும். ஆனால், கடந்த மாதத்தில் ரூ.36 ஆயிரம் மின்சாரக் கட்டணமாகச் செலுத்தும்படி ஆகிவிட்டது. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை என கணக்கெடுக்கப்படுவதால், இரண்டேகால் மடங்கு அதிகமாகச் செலுத்த வேண்டியுள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் இந்த மின்சாரக் கட்டணக் கொள்ளையைத் தடுக்கும் விதமாக மாதாமாதம் மின்கட்டணம் செலுத்தும் முறையைக் கொண்டுவருவோம் என மு.க.ஸ்டாலின் அப்போது கூறியிருந்தார். இந்நிலையில், அடுத்த மாத மின்கட்டணம் செலுத்தும் தேதியை எண்ணி அஞ்சிக்கொண்டிருக்கின்றேன். ஒரு வீட்டின் மின்கட்டணச் செலவே இவ்வளவு என்றால் மற்ற குடும்பச் செலவுகளை எவ்வாறு எதிர்கொள்வது எனத் தெரியவில்லை. அடுத்த மின்கட்டணமும் இதேபோல் செலுத்தச் சொன்னால், அதற்கான திறன் தமிழ்நாட்டில் எத்தனை குடும்பங்களுக்கு இருக்கும் என்பதை முதலமைச்சர் எண்ணிப்பார்க்க வேண்டும். தொழில் வாய்ப்பின்றி, வேலைவாய்ப்பின்றிப் பிள்ளைகளைப் பள்ளி, கல்லூரிகளில் சேர்க்க இயலாமல் வருமானம் இன்றித் தவித்துக்கொண்டிருக்கும் இம்மக்களுக்கு உதவும் வகையில் முதலமைச்சர் உடனடியாக மாதாந்திர மின்கட்டண முறையை அறிவிக்க வேண்டுகின்றேன்.

- தங்கர் பச்சான், திரைப்பட இயக்குநர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x