Published : 04 Nov 2020 03:13 AM
Last Updated : 04 Nov 2020 03:13 AM
நவீன பூங்குன்றனார் என்று மிகச் சரியாக பாலசுப்ரமணியன் பொன்ராஜால் அழைக்கப்படும் மா.அரங்கநாதன் பிறந்தநாளை (நவம்.3) ஒட்டி ‘இந்து தமிழ்’ நாளிதழ் ஒரு முழுப்பக்கம் ஒதுக்கிக் கொண்டாடியிருப்பதை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அதிலும் குறிப்பாக, மா.அரங்கநாதனின் எழுத்தை உள்வாங்கி எழுதும் ஆளுமைகளிடம் கட்டுரை வாங்கி வெளியிட்டிருப்பது அருமை. கடந்த ஒரு வருடமாக ‘காக்கைச் சிறகினிலே’ மாத இதழில் ‘மா.அரங்கநாதன் பிரதிகளை வாசித்தல்’ என்ற தலைப்பில் தொடர் எழுதிவருபவன் என்ற முறையில் இந்தக் கட்டுரைகளும் எனக்குப் பெரும் மகிழ்ச்சி அளிக்கின்றன. இப்படி ஒரு ஆழமான வாசிப்புக் கலாச்சாரத்தை (சென்ற வாரம் கவிஞர் அபியைச் சிறப்பித்திருந்தீர்கள்) வளர்த்தெடுக்கும் ‘இந்து தமிழ்’ இதழுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.
- க.பஞ்சாங்கம், பேராசிரியர்-எழுத்தாளர், புதுச்சேரி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT