Published : 01 Nov 2020 03:13 AM
Last Updated : 01 Nov 2020 03:13 AM
‘பொருளின் பொருள் கவிதை’ கட்டுரை நூல், ‘பறளியாற்று மாந்தர்’ நாவலுக்காகவும், அலாதியான அமைதியைத் தரும் அனுபவம் கொண்ட சிறுகதைகளுக்காகவும் அறியப்பட்ட மா.அரங்கநாதன், நாகர்கோவில் அருகில் திருவெண்பரிசாரம் ஊரில் 1932 நவம்பர் 3 அன்று பிறந்தவர். பெற்றோர் மகாதேவன் பார்வதியம்மாள். தமிழ் சிறுபத்திரிகை வரலாற்றில் இவர் நடத்திய ‘முன்றில்’ இதழுக்கும், அதன் வெளியீடுகளுக்கும் சிறந்த இடம் உண்டு. 2017 ஏப்ரல் மாதம் காலமானார். நவீன இலக்கியத்தில் புதுமைப்பித்தனின் நீட்சியாகவும், தொன்மையான தமிழ் மரபின் குறிப்பிடத்தக்க சாரத்தை உட்கொண்டவருமான மா.அரங்கநாதன் அசலான தமிழ்ப் படைப்பாளிகளில் ஒருவர்.
மா.அரங்கநாதன் படைப்புகள் (முழுத் தொகுப்பு)
நற்றிணை வெளியீடு
திருவல்லிக்கேணி, சென்னை-5.
விலை: ரூ. 890
தொடர்புக்கு: 044 – 2848 1725
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT