Published : 16 Dec 2021 03:05 AM
Last Updated : 16 Dec 2021 03:05 AM

மேஷம்: கனவுத் தொல்லை, தூக்கமின்மை வந்துபோகும்

மேஷம்: கனவுத் தொல்லை, தூக்கமின்மை வந்துபோகும். தியானம், யோகா இவற்றில் மனதைச் செலுத்துங்கள். மாலை முதல் தடைபட்ட வேலைகள் முடியும். வாகனம் செலவு வைக்கும்.ரிஷபம்: பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வாகனத்தில் செல்லும் போது நிதானம் தேவை. குலதெய்வக் கோயிலுக்கு சென்று நேர்த்திக்கடனை செலுத்துவீர்கள். பணவரவு திருப்தி தரும்.மிதுனம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். கடனைத் தீர்க்க வழி பிறக்கும். புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் நடவடிக்கைகள் மகிழ்ச்சியைத் தரும்.கடகம்: எதிரிகளை சாமர்த்தியமாக வீழ்த்துவீர்கள். இழுபறியாக இருந்த வழக்குகளில் வெற்றியுண்டு. வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். வெளியூர் பயணத்துக்குத் திட்டமிடுவீர்கள்.சிம்மம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப் பளிப்பீர்கள். வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.கன்னி: அலைச்சல், டென்ஷன், வீண் விரயம் ஏற்படக் கூடும். கடன் பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். வெளியூர் பயணங்கள் அலைச்சல் தந்தாலும் ஆதாயம் உண்டு. கலைப்பொருட்கள் சேரும்.துலாம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். பேச்சில் மிடுக்குத் தெரியும். பணவரவு அதிகரிக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து முடிவுகளை எடுக்கும்போது நிதானம் தேவை.விருச்சிகம்: எதிர்காலத் திட்டங்கள் பற்றி குடும்பத்தினருடன் ஆலோசனை செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். உங்களின் நிர்வாகத் திறமை அதிகரிக்கும்.தனுசு: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த காரசாரமான விவாதங்களெல்லாம் மறையும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.மகரம்: குழம்பித் தவித்துக் கொண்டிருந்த நீங்கள் இன்று தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். கணவன் - மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள்.கும்பம்: எதிர்காலத் திட்டங்கள் நிறைவேறத் தொடங்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். பால்ய நண்பர்களால் ஆதாயம் உண்டு. வேற்று மதத்தவர் தக்க சமயத்தில் உதவுவார்.மீனம்: பிரபலங்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். கணவன் - மனைவிக்குள் நிலவிவந்த பனிப்போர் மறையும். உறவினர், நண்பர்கள் வருகை உண்டு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x