Published : 09 Dec 2021 03:06 AM
Last Updated : 09 Dec 2021 03:06 AM
மேஷம்: மனக்குழப்பங்கள் விலகும். வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும்.ரிஷபம்: வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பணப்பற்றாக்குறை விலகும். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். தாயாரின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.மிதுனம்: எதிலும் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சுக்கும் ஆளாவீர்கள். மாலை முதல் கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் ஏற்படும்.கடகம்: உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். உங்களின் தனித்தன்மையைப் பின்பற்றுவது நல்லது. வெளியூர் பயணத்துக்கு திட்டமிடுவீர்கள்.சிம்மம்: சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சிந்தனைத்திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் உடல்நலம் சீராக இருக்கும். கலைப்பொருட்கள் சேரும்.கன்னி: எதிரிகளின் கொட்டம் அடங்கும். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடுகள் நீங்கும். விருந்தினர்கள், நண்பர் களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். பணவரவு உண்டு.துலாம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தினருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.விருச்சிகம்: கல்யாணப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். கணவன் - மனைவி இடையே நிலவிய பனிப்போர் முடிவுக்கு வரும். வீடு, வாகனத்தை சீர்செய்வீர்கள்.தனுசு: ஆரவாரமின்றி சில வேலைகளை முடிப்பீர்கள். நண்பர்கள், விருந்தினர் வருகை உண்டு. வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. மூத்த சகோதரர் உங்கள் உதவியை நாடுவார்.மகரம்: மனஉளைச்சல் வந்து போகும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவைப் பயன்படுத்துவது நல்லது. மாலை முதல் மனதில் தெளிவு பிறக்கும். பால்ய நண்பர் உதவுவார்.கும்பம்: சில வேலைகளை உங்கள் மேற்பார்வையிலேயே முடிப்பது நல்லது. குடும்பத்தில் எதிர்பாராத சலசலப்புகள் வந்து நீங்கும். யாரையும் மனம் நோகும்படி எடுத்தெறிந்து பேசாதீர்கள்.மீனம்: செயலில் வேகத்தைக் காட்டுவீர்கள். குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். பிள்ளைகளின் நீண்டநாள் கோரிக்கை களை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT