Published : 04 Dec 2021 03:07 AM
Last Updated : 04 Dec 2021 03:07 AM
வருமானவரி கணக்குத் தாக்கல்செய்வதற்கான கால அவகாசம்இம்மாதம் 31-ம் தேதியுடன்முடிவடைகிறது.
இதுதொடர்பாக வரி செலுத்துவோரின் இ-மெயில் முக வரிக்கு வருமானவரித் துறைசார்பில் உடனடியாக கணக்குத் தாக்கல் செய்ய நினைவூட்டல் செய்யப்பட்டு வரப்படுகிறது. அதில், இதுவரை 2.5 கோடிக்கும் மேற்பட்டவர்கள் வருமானவரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். எனவே, இதுவரை கணக்குத் தாக்கல் செய்யவில்லை எனில் உடனே தாக்கல் செய்ய வேண்டும். இதுகுறித்து உதவி தேவைப்பட்டால் 1800 103 0025 மற்றும் 1800 419 0025 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT