Published : 02 Dec 2021 03:05 AM
Last Updated : 02 Dec 2021 03:05 AM

மேஷம்: எதிர்ப்புகள், இழப்புகள், ஏமாற்றங்கள் நீங்கும்

மேஷம்: எதிர்ப்புகள், இழப்புகள், ஏமாற்றங்கள் நீங்கும். பிரிய மானவர்களின் சந்திப்பு நிகழும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிப்பு மரியாதை கூடும். பணவரவு திருப்தி தரும்.ரிஷபம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். அவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.மிதுனம்: விரும்பியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வழக்கு விவகாரங்கள் சாதகமாகும்.கடகம்: எதிர்பாராத செலவுகள் வந்தாலும் எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வந்து சமாளிப்பீர்கள். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும். மனைவிவழி உறவினர்களால் நன்மை ஏற்படும்.சிம்மம்: விருந்தினர், நண்பர்களின் வருகையால் வீடு கலகலப்பாகும். கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.கன்னி: சகோதரர் வகையில் நன்மை பிறக்கும். வீட்டின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் முடிவுக்கு வரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.துலாம்: சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அடுத்தடுத்து ஏற்படும். அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. வாகனம் செலவு வைக்கும்.விருச்சிகம்: எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது. உறவினர்கள், நண்பர்கள் உதவி கேட்டு நச்சரிப்பார்கள். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். வெளியூர் பயணம் ஏற்படும்.தனுசு: குழப்பத்திலிருந்த நீங்கள் இன்று திட்டவட்டமான முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து ஆலோசனை செய்வீர்கள். பால்ய நண்பர் தக்க சமயத்தில் உதவுவார்.மகரம்: குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசி, அவர்களின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். அரசு காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். கலைப்பொருட்கள் சேரும்.கும்பம்: முகமலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். உடல்நிலை சீராக இருக்கும். இழுபறியாக இருந்த தொகை கைக்கு வரும். வெளியூர் பயணங்களால் மனநிறைவு ஏற்படும். தாயாரின் ஆதரவு உண்டு.மீனம்: மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. சிறுசிறு அவமானங்கள் ஏற்படக்கூடும். எதிலும் நிதானமுடன் செயல்படுவது நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x