Published : 23 Nov 2021 03:05 AM
Last Updated : 23 Nov 2021 03:05 AM
மேஷம்: மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். வீட்டை ரசனைக்கேற்ப அலங்கரிப்பீர்கள். பங்கு வர்த்தகம் லாபம் தரும்.ரிஷபம்: குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். வீட்டின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அரசு காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.மிதுனம்: குடும்பத்தில் உள்ளவர்களைப் பற்றி வெளிநபர்களிடம் குறைகூறி பேசாதீர்கள். நகைச்சுவைக்காக சொல்லக்கூடிய சில கருத்துகள் கூட சீரியசாகக் கூடும். எதிலும் நிதானம் தேவை.கடகம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். நண்பர்கள், உறவினர்களை அநாவசியமாகப் பகைத்துக் கொள்ளாதீர்கள்.சிம்மம்: முகமலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். நீண்டநாள் ஆசை களை பூர்த்தி செய்வீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் ஏற்படும். தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.கன்னி: எதிர்ப்புகள், இழப்புகள், ஏமாற்றங்கள் யாவும் நீங்கும். பிரியமானவர்களுடன் எதிர்பாராத சந்திப்பு நிகழும். கணவன் - மனைவி இடையே நிலவிய கருத்துவேறுபாடுகள் நீங்கும்.துலாம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டு முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பயணத்தால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டு.விருச்சிகம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சிவசப்படாதீர்கள். வாகனம் செலவு வைக்கும்.தனுசு: புது எண்ணங்கள் தோன்றும். பணவரவு உண்டு. கணவன் - மனைவிக்குள் நிலவிய பனிப்போர் முடிவுக்கு வரும். பால்ய நண்பர்களைச் சந்திப்பதன் மூலம் மனநிறைவு கிட்டும்.மகரம்: எதிர்பாராத செலவுகள் வந்தாலும் எதிர்பார்த்த இடத்தி்ல் இருந்து பணம் வந்து சமாளிப்பீர்கள். பேச்சுத் திறமையால் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.கும்பம்: பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். அரசு காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். விருந்தினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும்.மீனம்: சகோதரர் வகையில் நன்மை பிறக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் யாவும் முடிவுக்கு வரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT