Published : 23 Nov 2021 03:06 AM
Last Updated : 23 Nov 2021 03:06 AM
தமிழகத்தில் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதன்படி, ஒரு பதவிக்கு பட்டப் படிப்பு கல்வித்தகுதி எனில் பட்டப் படிப்பை மட்டுமின்றி அதற்கு முந்தைய தகுதிகளான 10 மற்றும்பிளஸ் 2 வகுப்புகளையும் தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும்.
இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டு முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்றுமொழி விவரத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ் வழங்க அரசு தேர்வுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அரசுதேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மாஅனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,
‘‘2021-2022-ம் கல்வி ஆண்டு முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழில் மாணவர் 1 முதல் 10-ம் வகுப்புவரை எந்த பயிற்றுமொழியில் படித்தார் என்ற விவரம் வகுப்புவாரியாக குறிப்பிட்டுவழங்கப்படவுள்ளது. எனவே, தலைமை ஆசிரியர்கள் எமிஸ் தளத்தில், தங்கள்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் 1முதல் 10 வரையிலான வகுப்புகளை எந்த மொழியில் பயின்றார் என்ற விவரத்தை தனித்தனியே பதிவேற்றம் செய்ய வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT