Published : 10 Aug 2021 03:15 AM
Last Updated : 10 Aug 2021 03:15 AM
தமிழக நிதி நிலைமை குறித்தவெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று வெளியிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இருந்து தவிர்ப்பதற்காக இந்த வெள்ளை அறிக்கையைவெளியிடவில்லை. தேர்தல் வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும்’’ என்றார்.
மேலும், ‘‘கடந்த 5 ஆண்டுகளாக உள்ளாட்சித்தேர்தலை நடத்தாததால் 15-வது நிதிக்குழுவின் பரிந்துரைப்படியான நிதி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சிப்பிரதிநிதிகள் இல்லாததால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.2,500 கோடி அளவுக்கு மத்திய மானியம் கிடைக்கவில்லை. தமிழகம்பணக்கார மாநிலம். அரசாங்கத்தை ஒழுங்காக நடத்தினால், நிதியை மேம்படுத்தலாம். அதேநேரம் உட்கட்டமைப்பை சரி செய்யவேண்டும். அப்படிச் செய்தால் முழுமையாக திருத்தம் செய்ய முடியும்’’ என்றும் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT