Published : 24 Feb 2021 03:16 AM
Last Updated : 24 Feb 2021 03:16 AM
தமிழகம், புதுச்சேரியில் வரும் 27-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக் கூடும்.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது.
தமிழகம் மற்றும் அதை ஒட்டிய கடல் பகுதியில் தற்போதுகாற்று சுழற்சி ஏதும் நிலவவில்லை. எனவே, வரும் 27-ம்தேதி வரை தமிழகம், புதுச்சேரி,காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
23-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் குன்னூரில் 6 செமீ, அலகாரி எஸ்டேட்டில் 3 செமீ மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு நா.புவியரசன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT