Published : 20 Nov 2020 03:14 AM
Last Updated : 20 Nov 2020 03:14 AM
அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 7.5%இட ஒதுக்கீட்டில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புக்கு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 5 அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர் களுக்கு அதிமுக சார்பில் நிதியுதவி அளிக்கப்பட்டது.
தமிழக அரசின் 2020-21-ம்ஆண்டுக்கான மருத்துவப் படிப்புகலந்தாய்வில் அரசுப் பள்ளியில் படித்த காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 5 மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் இடம் கிடைத்துள்ளது.
இந்த மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு கல்விக் கட்டணம் அதிமுக சார்பில் நேற்றுவழங்கப்பட்டது. அந்த மாணவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று அதிமுக மாவட்டச் செயலர் வி.சோமசுந்தரம் தனது சொந்த பணத்தில் இருந்து அவர்களுக்கான கல்விக் கட்டணத்தை வழங்கி, மருத்துவப் படிப்புக்கு தேர்வான மாணவ,மாணவிகளுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT