Published : 12 Dec 2021 03:08 AM
Last Updated : 12 Dec 2021 03:08 AM
ராஜஸ்தானின் பொக்ரான் பாலைவனத்தில் அதிநவீன மேம்படுத்தப்பட்ட பினாகா-இஆர் ராக்கெட் லாஞ்சர் நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
உள்நாட்டு தயாரிப்பான பினாகா ராக்கெட் லாஞ்சர் இந்திய ராணுவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. கார்கில் போர் உட்பட பல்வேறு சூழல்களில் இந்த வகை லாஞ்சர்கள் ராணுவத்தின் பலத்தை எதிரிகளுக்கு பறைசாற்றின. பினாகா ராக்கெட் லாஞ்சர்களை மேம்படுத்தும் ஆராய்ச்சிகடந்த 2019-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி,மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) பல்வேறு கிளை அமைப்புகள் இணைந்து மேம்படுத்தப்பட்ட பினாகா ராக்கெட் லாஞ்சரை வடிவமைத்துள்ளன.
ராஜஸ்தானின் பொக்ரான் பாலைவனத்தில் டிஆர்டிஓ மற்றும் ராணுவம் இணைந்து பினாகா-இஆர் ராக்கெட் லாஞ் சரை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்தன.
இதுகுறித்து ராணுவ வட்டாரங்கள் கூறும்போது, "புதிய ராக்கெட் லாஞ்சர் மூலம் 44 விநாடிகளில் 72 ஏவுகணைகளை ஏவ முடியும். எந்தவொரு கால சூழ்நிலையிலும் இது திறம்பட செயல்படும். இதனை போர்க்களத்துக்கு எடுத்துச் செல்வதும் எளிது" என்று தெரிவித்தன.
பீரங்கி அழிப்பு ஏவுகணை
பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம் பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) ஹெலிகாப்டரில் இருந்து ஏவும் சான்ட் என்ற பெயரிலான பீரங்கிஅழிப்பு ஏவுகணையை வடிமைத்துள்ளது. இந்த ஏவுகணையை டிஆர்டிஓ மற்றும் இந்திய விமானப்படை இணைந்து பொக்ரான் பாலைவனத்தில் நேற்று வெற்றிகரமாக சோதனை செய்தன. ஹெலிகாப்டரில் இருந்து சீறிப் பாய்ந்தசான்ட் ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது.பினாகா ராக்கெட் லாஞ்சர், சான்ட் ஏவுகணையை வெற்றி கரமாக சோதனை செய்த டிஆர்டிஓ குழுவினருக்கு மத்தியபாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT