Published : 07 Dec 2021 03:06 AM
Last Updated : 07 Dec 2021 03:06 AM

பங்குச் சந்தையில் 949 புள்ளிகள் சரிவு :

மும்பை

கரோனா வைரஸின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் பரவல் பீதி பங்குச் சந்தையில் நேற்று கடுமையாக எதிரொலித்தது.

வாரத்தின் தொடக்க நாளான நேற்று மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 949 புள்ளிகள் குறைந்து 56,747-ல் நிலை பெற்றது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டென் நிப்டி 284 புள்ளிகள் சரிந்து 16,912-ல் நிலை பெற்றது.

இண்டஸ் இந்த் வங்கியின் பங்கு விலை மிக அதிக பட்சமாக 4% சரிந்தது. பஜாஜ் பின்செர்வ், பார்தி ஏர்டெல், டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக், டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனங் களின் பங்குகளும் அதிக அளவில் சரிந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x