Published : 06 Dec 2021 03:07 AM
Last Updated : 06 Dec 2021 03:07 AM

நாட்டில் மேலும் 17 பேருக்கு ஒமைக்ரான் தொற்று : பாதிப்பு எண்ணிக்கை 21 ஆக உயர்வு

புதுடெல்லி

நாட்டில் மேலும் 17 பேருக்கு நேற்று ஒமைக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21-ஆக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் முழுமையாக விலகாத நிலையில், உருமாறிய ஒமைக்ரான் கரோனா பரவல் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 40 நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (டபிள்யூஎச்ஓ) தெரிவித்துள்ளது.

இதுவரை இந்த வைரஸால் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது போலவே இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று பரவி உள்ளது. சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு வந்த பயணி மற்றும்பெங்களூருவைச் சேர்ந்த டாக்டர்என 2 பேருக்கு முதலில் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவர்களுடன் தொடர்பில் இருந்த முதல் நிலைத் தொடர்பாளர்கள், 2-ம் நிலைத் தொடர்பாளர்கள் கண்டறியப்பட்டு ஏறக்குறைய500 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள் ளனர். ஒமைக்ரானால் பாதிக் கப்பட்ட இருவரில் ஒருவர் 46 வயதான மருத்துவர், மற்றொருவர் 66 வயதானவர்.

இதேபோல குஜராத் மாநிலம் ஜாம்நகரில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, தென்னாப்பிரிக்கா வில் இருந்து மகாராஷ்டிரா திரும்பிய 33 வயது நிரம்பிய ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் இந்தியாவில்நேற்று முன்தினம் வரை ஒமைக்ரான்வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆக இருந்தது.

இந்நிலையில், தான்சானியாவில் இருந்து டெல்லி திரும்பிய ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர மகாராஷ்டிராவில் மேலும் 7 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதுபோல ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 9 பேருக்கு ஒமைக்ரான் தொற்றுஇருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிராவில் ஏற்கெனவே ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்றுஇருப்பது தெரியவந்த நிலையில்மேலும் 7 பேருக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டது நேற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதில் 4 பேர் வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்தவர்கள். பாதிக்கப்பட்ட மேலும் 3 பேர்அவர்களுடன் தொடர்பில் இருந்த வர்கள் என மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கேஜ்ரிவால் கோரிக்கை

இதனிடையே வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் விமானங்களை நிறுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் கேஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x