Published : 03 Dec 2021 03:06 AM
Last Updated : 03 Dec 2021 03:06 AM
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் என்ற புதியவகை கரோனா வைரஸ் உலகம்முழுவதும் பரவி வருகிறது. இதையடுத்து நாடு முழுவதும் அனைத்து விமான நிலையங்களிலும் வெளிநாட்டு பயணிகளுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.
கடந்த சில நாட்களில் வெளிநாடுகளில் இருந்து மும்பை விமான நிலையத்துக்கு வந்த 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த சூழலில் வெளிநாடுகளில் இருந்து மும்பை விமான நிலையத்துக்கு வந்த மேலும் 4 பேருக்குகரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவர்கள் எந்த வகையான கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைகண்டறிய அவர்களின் சளி மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT