Published : 02 Dec 2021 03:05 AM
Last Updated : 02 Dec 2021 03:05 AM
பிடபிள்யூஎஃப் உலக டூர் பைனல்ஸ் தொடரை வெற்றியுடன் தொடங்கினார் இரு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து.
இந்தோனேஷியாவின் பாலியில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் போட்டியில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள பி.வி.சிந்து தனது முதல் ஆட்டத்தில் டென்மார்க்கின் லைன் கிறிஸ்டோபர்செனை எதிர்த்து விளையாடினார். 38 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 21-14, 21-16 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி காந்த் தனது முதல் ஆட்டத்தில் 21-14, 21-16 என்ற நேர் செட்டில் பிரான்ஸின் டோமா ஜூனியர் போபோவை வீழ்த்தினார்.
மகளிர்இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா, ஷிக்கி ரெட்டி 14-21, 18-21 என்ற நேர் செட்டில் ஜப்பானின் நமி மாட்சுயாமா சிஹாரு ஷிதா ஜோடியிடம் தோல்வி கண்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT