Published : 10 Nov 2021 03:06 AM
Last Updated : 10 Nov 2021 03:06 AM

நியூஸிலாந்து டி 20 தொடருக்கு ரோஹித் கேப்டனாக நியமனம் : ஹர்திக் பாண்டியா நீக்கம், வெங்கடேஷ் ஐயருக்கு வாய்ப்பு

புதுடெல்லி

நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி 20 தொடருக்கான இந்திய அணிக்கு ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். விராட் கோலி, ஜஸ்பிரீத் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

நியூஸிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி 20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.முதல் டி 20 ஆட்டம் வரும் 17-ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது. இந்நிலையில் டி 20தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி ஏற்கெனவே கேப்டன் பதவியில் இருந்து விலகிவிட்டதால் ரோஹித் சர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேவேளையில் விராட் கோலி, ஜஸ்பிரீத் பும்ரா, மொகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷால் படேல் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் ருதுராஜ் கெய்க்வாட் இலங்கை அணிக்கு எதிரான தொடரில்பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நீக்கப்பட்டுள்ள நிலையில் யுவேந்திர சாஹல் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். கே.எல்.ராகுல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அணி விவரம்: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், இஷான் கிஷன், வெங்கடேஷ் ஐயர், யுவேந்திர சாஹல், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல், அவேஷ் கான், புவனேஷ்வர் குமார், தீபக் ஷாகர், ஹர்ஷால் படேல், மொகமது சிராஜ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x