Published : 08 Nov 2021 01:09 AM
Last Updated : 08 Nov 2021 01:09 AM
ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது நியூஸிலாந்து அணி.
ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 12சுற்றில் குரூப் 2-ல் நேற்று அபுதாபியில் நடைபெற்ற ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி தனது கடைசிலீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி8 விக்கெட்கள் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நஜ்புல்லா ஸத்ரன் 48பந்துகளில், 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் விளாசினார். குல்பாதின் நயிப் 15, மொகமதுநபி 14 ரன்கள் சேர்த்தனர். நியூஸிலாந்து அணி தரப்பில் டிரெண்ட் போல்ட் 3, டிம் சவுதி 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
125 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து 18.1 ஓவரில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் கேன் வில்லியம்சன் 40,டேவன் கான்வே 36 ரன்கள் எடுத்துஆட்டமிழக்காமல் இருந்தனர். மார்ட்டின் கப்தில் 28, டேரில் மிட்செல் 17 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். நியூஸிலாந்து அணிக்கு இது 4-வது வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் குரூப்2-ல் 8 புள்ளிகளுடன் அரை இறுதிக்கு முன்னேறியது நியூஸிலாந்து அணி.
இதே பிரிவில் ஏற்கெனவே பாகிஸ்தான் அணி அரை இறுதிக்குதகுதி பெற்றிருந்தது. தற்போது2-வது அணியாக நியூஸிலாந்துஅரை இறுதியில் கால்பதித்துள்ளதால் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT