Published : 07 Nov 2021 03:06 AM
Last Updated : 07 Nov 2021 03:06 AM
ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 12 சுற்றில் குரூப் 1-ல் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மேற்கிந்தியத் தீவுகளை 8 விக்கெட் வித்தியாசத் தில் வீழ்த்தி 4-வது வெற்றியை பதிவு செய்தது ஆஸ்திரேலியா.
அபுதாபியில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் 7 விக்கெட்கள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் கெய்ரன் பொலார்டு 31 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் விளாசினார். எவின் லிவீஸ் 29, சிம்ரன் ஹெட்மயர் 27, ஆந்த்ரே ரஸ்ஸல் 18, கிறிஸ் கெயில் 15, டுவைன் பிராவோ 10 ரன்கள் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி சார்பில் ஜோஸ் ஹேசல்வுட் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
158 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி நெட் ரன்ரேட்டை உயர்த்தும் வகையில் அதிரடியாக விளையாடி 16.2 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டேவிட் வார்னர் 56 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 89 ரன்களும் மிட்செல் மார்ஷ் 32 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 53 ரன்களும் விளாசினர். ஆஸி. அணிக்கு இது 4-வது வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் அந்த அணி அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பலப்படுத்திக் கொண்டது.
இன்றைய ஆட்டம்ஆப்கானிஸ்தான் - நியூஸிலாந்து
நேரம்: பிற்பகல் 3.30
இடம்: அபுதாபி
பாகிஸ்தான் - ஸ்காட்லாந்து
நேரம்: இரவு 7.30
இடம்: ஷார்ஜாநேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT