Published : 06 Nov 2021 03:05 AM
Last Updated : 06 Nov 2021 03:05 AM

ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் - நமீபியா அணியை எளிதாக : வென்றது நியூஸிலாந்து : அரையிறுதிக்குள் நெருங்குகிறது

ஷார்ஜா

ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்றில் குரூப் 2-ல் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நமீபியாவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3-வது வெற்றியை பதிவு செய்தது நியூஸிலாந்து அணி.

ஷார்ஜாவில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 21 பந்துகளில், 3 சிக்ஸர்கள், ஒருபவுண்டரியுடன் 39 ரன்களும் ஜேம்ஸ் நீஷாம் 23 பந்துகளில், 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 35 ரன்களும் விளாசினர். கேப்டன் கேன்வில்லியம்சன் 28, மார்ட்டின் கப்தில் 18, டேரில் மிட்செல் 19, டேவன் கான்வே 17 ரன்கள் சேர்த்தனர்.

164 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நமீபியாவால் 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 111 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக ஜேன் கிரீன் 23, மைக்கேல் வான் லிங்கென் 25, ஸ்டீபன் பார்டு 21 ரன்கள் சேர்த்தனர். நியூஸிலாந்து தரப்பில் டிம் சவுதி, டிரெண்ட் போல்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.

52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணிக்கு இது 3-வது வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் அந்த அணி 6 புள்ளிகளுடன் அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை அதிகரித்து கொண்டது.

இன்றைய போட்டிஆஸ்திரேலியா - மேற்கிந்தியத் தீவுகள்

இடம்: அபுதாபி; நேரம்: பிற்பகல் 3.30தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து

இடம்: ஷார்ஜா, நேரம்: இரவு 7.30நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x