Published : 22 Oct 2021 03:05 AM
Last Updated : 22 Oct 2021 03:05 AM
மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் சமீபத்தில்வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2021-22 நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் பணியாளர் சேமநல நிதி (பிஎப்) சந்தாதாரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் புதிதாக இணைந்துள்ள சந்தாதாரர்களின் எண்ணிக்கை 12.61 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. அதாவது 2021 ஆகஸ்ட் மாதத்தில் 14.81 லட்சம் பேர் பிஎப்திட்டத்தில் புதிதாக இணைந்துள்ளனர்.
இதில் சுமார் 9.19 லட்சம் பேர் முதல் முறை சந்தாதாரர்கள். 20 சதவீதத்தினர் பெண்கள். இந்த எண்ணிக்கை ஜூலை மாதத்தை விடவும் ஆகஸ்ட்டில் 10.18 சதவீதம் உயர்ந்துள்ளது.
மேலும் பிஎப் திட்டத்திலிருந்து ஏற்கெனவே வெளியேறிய 5.62 லட்சம் பேர் ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் இணைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கால் வேலையிழப்பு ஏற்பட்டதால் பலர் பிஎப் அமைப்பிலிருந்து வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT