Published : 18 Oct 2021 03:09 AM
Last Updated : 18 Oct 2021 03:09 AM

டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை - 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஓமன் வெற்றி :

அல் அமரத்

ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் முதற்கட்ட சுற்றில் பப்புவா நியூ கினியாவை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஓமன் அணி.

ஆடவருக்கான ஐசிசி 7-வது டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் முதற்கட்ட ஆட்டங்கள் ஓமனில் நேற்று தொடங்கியது. அல் அமரத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஓமன் - பப்புவா நியூ கினியா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பப்புவா நியூ கினியா 9 விக்கெட்கள் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஆசாத் வாலா 43 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 56 ரன்களும் சார்லஸ் அமினி 26 பந்துகளில் 37 ரன்களும் எடுத்தனர். ஓமன் அணி சார்பில் ஜீஷன் மக்சூத் 4 விக்கெட்கள் வீழ்த்தினார்.

130 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஓமன் 13.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜதிந்தர் சிங் 42 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 73 ரன்களும் அகிப் இலியாஸ் 43 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 50 ரன்களும் விளாசினர். 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஓமன் அணி 2 புள்ளிகள் பெற்றது.

இன்றைய ஆட்டம்நெதர்லாந்து - அயர்லாந்து

இடம்: அபுதாபி

நேரம்: பிற்பகல் 3.30இலங்கை - நமீபியா

இடம்: அபுதாபி

நேரம்: இரவு 7.30நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x