Published : 21 Sep 2021 03:18 AM
Last Updated : 21 Sep 2021 03:18 AM
நேற்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தையில் 525 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 58,490 ஆக நிலை கொண்டது. இது தேசியப் பங்குச் சந்தையில் 188 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 17,396 ஆக நிலைகொண்டது.
வர்த்தகத் தொடக்க நேரத்திலேயே மும்பை மற்றும் தேசியப் பங்குச் சந்தைகள் சரிவில் இருந்தன. அதன் பிறகு காலை நேரவர்த்தகத்தில் சற்று ஏற்றம் காணப்பட்டது. ஆனால், மதியத்துக்குப் பிறகு பங்குகள் மதிப்பு சரியத் தொடங்கியது. மெட்டல் தயாரிப்பு தொடர்பான நிறுவனங்கள் அதிக அளவில் இழப்பைச் சந்தித்தன. அதிகபட்சமாக டாடா ஸ்டீல் நிறுவனம் 9.5% அளவில் சரிவைக் கண்டது. அதைத் தொடர்ந்து எஸ்பிஐ 3.69%, இந்தஸ்இந்த் பேங்க் 3.50%, ஹெச்டிஎஃப்சி 2.90%, ரெட்டிஸ் லேப்ஸ் 2.30%, மஹிந்திரா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT