Published : 13 Aug 2021 03:15 AM
Last Updated : 13 Aug 2021 03:15 AM
நாட்டில் புதிதாக 41,195 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 490 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 41,195 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. முந்தைய நாளை விட குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இது அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 490 பேர் உயிரிழந்தனர். இதுவும் முந்தைய நாளை விட அதிகம் ஆகும்.
நாட்டில் கரோனா நோய்த் தொற்றுக்கு ஆளானவர்கள் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 20 லட்சத்து 77,706 ஆகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 29,669 ஆகவும் அதிகரித்துள்ளது. சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை3 லட்சத்து 87,987 ஆக குறைந்துள்ளது. இது மொத்த நோயாளிகளில் 1.21 சதவீதம் ஆகும். இதுவரை 52 கோடியே 32 லட்சத்து 53,450தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.-பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT