Published : 13 Jul 2021 03:12 AM
Last Updated : 13 Jul 2021 03:12 AM
யூரோ கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை பெனால்டி ஷூட் அவுட்டில் 3-2 என்றகோல் கணக்கில் வீழ்த்தி 53 வருடங்களுக்குப் பிறகு சாம்பியன் பட்டம் வென்றது இத்தாலி அணி.
லண்டனின் வெம்பிலி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 2-வது நிமிடத்தில் ஹாரி கேன், கீரன் டிரிப்பியருக்கு பந்தை பாஸ் செய்தார். அவர் அதை பாக்ஸ் பகுதிக்கு வெளியே இருந்து அடித்த கிராஸை பெற்ற லூக் ஷா கோலாக மாற்ற, இங்கிலாந்து அணி 1-0 என்றகோல் கணக்கில் முன்னிலை பெற்றது.67-வது நிமிடத்தில் இத்தாலி அணி இதற்கு பதிலடி கொடுத்தது. இலக்குக்கு மிக நெருக்கமாக லியோனார்டோ போனூசி அடித்த கோலால் ஆட்டம் 1-1 என சமநிலையை எட்டியது. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களின் முடிவில் ஆட்டம் 1-1 என சமநிலையில் இருந்தது.
இதையடுத்து கூடுதலாக வழங்கப்பட்ட 30 நிமிடங்களில் இரு அணிகள் தரப்பில் மேற்கொண்டு ஏதும் கோல்கள் அடிக்கப்படவில்லை. இதனால் வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் கடைபிடிக்கப்பட்டது. இதில்இத்தாலி அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இத்தாலிஅணியின் கோல்கீப்பரான கியான்லூகி டோனாரும்மா அற்புதமாக செயல்பட்டு இங்கிலாந்து வீரர்களான ஜடோன்சான்சோ, புகாயோ சாகா ஆகியோரது கோல் அடிக்கும் முயற்சியை தடுத்தார். தொடர்ந்து மார்கஸ் ரஷ்ஃபோர்டு அடித்த பந்து கோல்கம்பத்தின் தூண் மீது பட்டு விலகிச் சென்றது.
அதேவேளையில் இத்தாலி அணி சார்பில் ஃபெடரிகோ பெர்னார்டெச்சி, லியோனார்டோ போனூசி, டொமினிகோ பெரார்டி கோல் அடித்து அசத்தினர். யூரோ கால்பந்து தொடரில் இத்தாலி அணியானது 53 வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் சாம்பியன் பட்டம்வென்றுள்ளது. அந்த அணி கடைசியாக 1968-ம் ஆண்டு கோப்பையை கைப்பற்றியிருந்தது.
தொடரின் சிறந்த வீரராக இத்தாலிஅணியின் கோல்கீப்பர் கியான்லூகிடோனாரும்மா தேர்வு செய்யப்பட்டார்.719 நிமிடங்கள் விளையாடியிருந்த கியான்லூகி 9 கோல்களை தடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT