Published : 20 Apr 2021 03:14 AM
Last Updated : 20 Apr 2021 03:14 AM
ஏப். 9: பிரிட்டன் அரசி இரண்டாம் எலிச பெத்தின் கணவர் இளவரசர் பிலிப் (99) காலமானார். பிரிட்டன் வரலாற்றில் அரசர் அல்லது அரசியின் வாழ்க்கைத் துணைக்கு வழங்கப்படும் ‘கன்சார்ட்’ என்கிற அந்தஸ்தை நீண்ட காலம் தக்கவைத்திருந்தவர் பிலிப்.
ஏப். 10: திண்டுக்கல் காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எஸ்.மாதேஸ்வரன் பொறுப்பேற்றார்.
ஏப். 11: பிஹாரைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் அர்பித் குமார், அபிஜித் குமார் ஆகியோர் கண்டுபிடித்த தொலைவிலிருந்தே கரோனா வெப்பப் பரிசோதனை கண்டறியும் கருவிக்கு மத்திய அரசு காப்புரிமை வழங்கியது
ஏப். 12: டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மல்யுத்த வீராங்கனைகளான சோனம் மாலி (18), அன்ஷு மாலிக் (19) ஆகியோர் தகுதிபெற்றனர்.
ஏப். 13: ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் வி’ கரோனா தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்காக இந்திய மருந்துப் பொருள்கள் கட்டுப்பாட்டு இயக்குநரகம் அனுமதி அளித்தது. இது இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும் மூன்றாவது தடுப்பூசி.
ஏப். 13: தலைமைத் தேர்தல் ஆணையர் அனில் அரோரா ஓய்வு பெற்றதையடுத்து, புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷீல்சந்திரா நியமிக்கப்பட்டார். 24-வது ஆணையரான இவர், 2022 மே 14 வரை பொறுப்பில் இருப்பார்.
ஏப். 14: சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளராக புதுச்சேரியைச் சேர்ந்த நீதிபதி பி.தனபால் நியமிக்கப்பட்டார்.
ஏப். 15: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் ‘ககன்யான்’ திட்டத்தில் ஒருங்கிணைந்து செயல்பட இந்தியா-பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஏப். 16: கஜகஸ்தானின் அல்மாட்டி நகரில் நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சரிதா தொடர்ந்து இரண்டாவது முறையாகத் தங்கம் வென்றார்.
ஏப். 17: ‘சின்ன கலைவாணர்’ என்று அழைக் கப்பட்ட தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் விவேக் (59) காலமானார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT