Published : 01 Mar 2021 03:16 AM
Last Updated : 01 Mar 2021 03:16 AM

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை ரோஹித் சர்மா முன்னேற்றம்

புதுடெல்லி

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ள டெஸ்ட்போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா 8-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஐசிசி நேற்று டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. இதில் ரோஹித் சர்மா, 8-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் அவர் பெற்ற அதிகபட்ச தரவரிசை இதுதான். அண்மையில் அகமதாபாத்தில் நடைபெற்று முடிவடைந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் 66 ரன்களும், 2-வதுஇன்னிங்ஸில் 25 ரன்களும் ரோஹித் சர்மா எடுத்திருந்தார்.

இதையடுத்து, டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில், ரோஹித் சர்மா 742 புள்ளிகளைப் பெற்று 8-வது இடத்தில் உள்ளார்.

2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ரோஹித் சர்மா டெஸ்ட்தரவரிசையில் 722 புள்ளிகள் எடுத்ததே இதுவரை சிறந்ததாக இருந்தது. அதை தற்போது முறியடித்துள்ளார்.

அதேநேரத்தில், 3-வது டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸிலும் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடாத சேதேஸ்வர் புஜாரா, 708 புள்ளிகளுடன் 10-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். முதலிடத்தில் கேன் வில்லியம்ஸனும் (நியூஸிலாந்து), 2-வது இடத்தில் ஸ்டீவ் ஸ்மித்(ஆஸ்திரேலியா), 3-வது இடத்தில் லாபுஷேன் (ஆஸ்திரேலியா) ஆகியோர் உள்ளனர். தொடர்கின்றனர். இங்கிலாந்தின் ஜோ ரூட் 4-வது இடத்திலும், இந்திய அணி கேப்டன்விராட் கோலி 5-வது இடத்திலும் உள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதிராக 3-வது டெஸ்ட் போட்டியில் 11 விக்கெட் வீழ்த்திய அக்சர் படேல், பவுலிங் தரவரிசையில் 38-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அஸ்வின்7 விக்கெட் வீழ்த்தியதையடுத்து, 3-வது இடத்துக்குவந்துள்ளார். ஆல்ரவுண்டர்கள்வரிசையில் அஸ்வின் 5-வதுஇடத்திலேயே நீடிக்கிறார். இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா 2-வது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் மேற்கு இந்திய அணி தீவுகள் வீரர் ஜேசன் ஹோல்டர் தொடர்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x