Published : 24 Jan 2023 06:35 AM
Last Updated : 24 Jan 2023 06:35 AM
புதுடெல்லி: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பு நாடு ஆவதற்கு பிரிட்டன் ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிரிட்டன் தூதர் அலெக்ஸாண்டர் எல்லிஸ் நேற்று கூறியதாவது:
இந்தியா ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு நாங்கள் நிச்சயமாக ஆதரவு தெரிவிப்போம். பாது காப்பு கவுன்சில் இன்றைய யதார்த்தங்களை பிரதிபலிக்கும் அமைப்பாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக் கிறோம். அதேசமயம், பாதுகாப்பு கவுன்சிலில் மாற்றத்தை ஏற்படுத்து வது என்பது மிகவும் கடினமான பணியாக உள்ளது. அதற்கான தேவையை கருத்தில் கொண்டு நாம் திறம்பட பணியாற்றிட வேண்டும்.
இந்தியாவிடம் வேண்டுவதெல் லாம் ஐ.நா. பாதுகாப்பு சபையை தற்போதைய காலக்கட்டத்துக்கு ஏற்ப உண்மையில் பயனுள்ள அமைப்பாக மாற்ற வேண்டும் என்பதே. குறிப்பாக, எளிதில் பாதிக்கப்படக் கூடிய தீவு நாடுகளுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதிக ஆதரவை வழங்க வேண்டும். இதன் மூலம்உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தமுடியும். இவ்வாறு அலெக்ஸாண் டர் எல்லிஸ் கூறினார்.
ஐ.நா.வின் அதிகாரம் மிகுந்த அமைப்பாக பாதுகாப்பு கவுன்சில் உள்ளது. மொத்தம் 15 உறுப்பினர்கள் அடங்கிய இந்த கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களான 5 நாடுகளும், இந்தியா உள்பட 10 நாடுகள் தற்காலிக உறுப்பினர்களாகவும் அங்கம் வகிக்கின்றன.
ஐ.நா. பாதுகாப்பு சபையில் 5 நிரந்தர உறுப்பினர்களாக சீனா, பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் உள்ளன. இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று பல நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. நிரந்தர உறுப்பினராக இந்தியா வுக்கு பல நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. ஆனால், சீனாவும் பாகிஸ்தானும் இந்தியாவை ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT