Published : 02 Dec 2021 03:07 AM
Last Updated : 02 Dec 2021 03:07 AM
தமிழகத்தில் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வதில் கும்மிடிப்பூண்டி காஞ்சி வள்ளுவன் ஐஏஎஸ் அகாடமி சிறந்து விளங்குகிறது. குறுகிய காலத்திலேயே 500-க்கும் மேற்பட்ட மாணவர்களை தேர்ச்சி அடைய செய்து சாதனை படைத்துள்ளது.
குரூப்-1, 2 மற்றும் குரூப்-4 தேர்வுகளுக்கான அறிவிப்பு தமிழ்நாடு தேர்வாணைத்தின் மூலம் ஓரிரு வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மாணவர்களை இத்தேர்வுக்காக தயார்படுத்தும் விதமாக ஓர் ஆண்டுகால பயிற்சிவரும் டிச. 4-ம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு தொடங்குகிறது. மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களின் வழிகாட்டலில் வகுப்புகள் நடத்தப்படும்.
பயிற்சியில் சேர முன்பதிவு செய்யும் மாணவர்களுக்கு 50 சதவீத ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு இன்று தொடங்கி வரும் 5-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறுகிறது. வெளியூர் மாணவர்களுக்கு தங்கிப் பயிலும் வசதியும் ஏற்பாடு செய்து தரப்படும்.
முன்பதிவு செய்ய விரும்புபவர்கள் என டைப் செய்து 9442678741 என்ற செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பலாம். பயிற்சியில் இணைந்தவர்களுக்கு பாடதிட்டம் மற்றும் வினாத்தாள்கள் இலவசமாக வழங்கப்படும் என இப்பயிற்சி மையத்தின் நிர்வாக அதிகாரி திரு.நரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT