Published : 25 Apr 2021 06:09 AM
Last Updated : 25 Apr 2021 06:09 AM
சமண தீர்த்தங்கரர்களில் 24-வதுதீர்த்தங்கரரான பகவான் மகாவீரர்அவதரித்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஆளுநர்,முதல்வர், தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: மகாவீரரின் அகிம்சை, உண்மை, உலகத்தின் மீதான அன்புஉள்ளிட்ட போதனைகள், உலக அளவில் சரியான, நேர்மையான பாதையை உருவாக்கியது. ஆன்மாவின் குரலை மதிக்க கற்றுக் கொடுத்தார் மகாவீரர். இந்த தருணத்தில் அவரது போதனைகளை ஏற்று, அமைதியான, இணக்கமான, சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவோம்.
முதல்வர் பழனிசாமி: பகவான் மகாவீரர் போதித்த அகிம்சை, சத்தியம், பற்றற்று இருத்தல், பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாமை போன்ற உயரிய நெறிகளை மக்கள்அனைவரும் தங்கள் வாழ்வில் பின்பற்றி வாழ்ந்தால் உலகில் அன்பும், அமைதியும் தழைத்தோங்கும்.
அறம், அகிம்சையை இரு கண்களாக போற்றிய பகவான் மகாவீரரின்பிறந்தநாளை மகிழ்வுடன் கொண்டாடும் சமணப் பெருமக்களுக்கு மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகள்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: இம்சையை விட்டுஅகிம்சையை கடைபிடிக்க வேண்டும், கொல்லாமையும், பிற உயிர்க்குதீங்கு செய்யாமையுமே அறம் என்பதை மக்களுக்கு விளக்கி, அகிம்சைநெறியை உலகுக்கு உணர்த்தியவர்மகாவீரர். அவரது போதனைகளைபின்பற்றி வாழும் ஜைன மக்கள்அனைவருக்கும் மகாவீர் ஜெயந்திநல்வாழ்த்துகள்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: எந்த ஒரு உயிரினத்துக்கும் தீங்கு விளைவிக்காது இருப்பதே உண்மையான மனிதமாண்பு என்று போதித்த மகாவீரர்பிறந்தநாளை கொண்டாடும் ஜைன மதத்தினருக்கு வாழ்த்துகள்.
ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து:அறம், அகிம்சையை இரு கண்களாக கருதிய பகவான் மகாவீரரின் போதனைகளைப் பின்பற்றி வாழும் அனைவருக்கும் மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகள்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள் ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT