Published : 19 Jan 2021 06:49 AM
Last Updated : 19 Jan 2021 06:49 AM
தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 20, 21-ம் தேதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட தென் மாநிலங்களில் 19-ம் தேதி வடகிழக்கு பருவமழை விலக வாய்ப்புள்ளது. 20, 21 ஆகியதேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், சென்னை, புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் நிலவக் கூடும். குளிரைப் பொறுத்தவரை உதகையில் 5 டிகிரி, வால்பாறையில் 7 டிகிரி, குன்னூரில் 9 டிகிரி, கொடைக்கானலில் 10 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT