Published : 10 Jan 2021 03:28 AM
Last Updated : 10 Jan 2021 03:28 AM
நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி வரும் 16-ம் தேதி தொடங்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
புனேவின் செரம் இன்ஸ்டிடியூட் தயாரித்து வரும் ஆக்ஸ்போர்டு பல் கலைக்கழகத்தின் கோவிஷீல்டு, ஹைதராபாத்தின் பாரத் பயோ டெக் நிறுவனம் தயாரித்து வரும் கோவேக்ஸின் கரோனா தடுப்பூசிகளை அவசர நிலைக்கு பயன்படுத்த இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (டிசிஜிஐ) கடந்த 3-ம் தேதி அனுமதி வழங்கியது.
பிரதமர் ஆலோசனை
இந்நிலையில் கரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லி யில் நேற்று உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கேபினட் செயலாளர், பிரதமரின் முதன்மை செயலாளர், சுகாதாரத் துறை செய லாளர் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.இந்தக் கூட்டத்தில் சுகாதார பணி யாளர்கள், பொதுமக்களுக்கு முன் னுரிமை அடிப்படையில் கரோனா தடுப்பூசி போடுவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக தேர்தல் நடைமுறையின் படி ஒவ்வொரு பூத் அளவிலும் கரோனா தடுப்பூசி முகாம்களை நடத்துவது, ஏற்கெனவே வெற்றி கரமாக அமல்படுத்தப்பட்ட தடுப்பூசி திட்டங்களை பின்பற்றுவது ஆகியவை குறித்து பிரதமர் நரேந் திர மோடியிடம் அதிகாரிகள் எடுத் துரைத்தனர்.
கரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பாக 'கோ வின்' என்ற பெயரில் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியில் ஏற்கெனவே 79 லட்சம் சுகாதார ஊழியர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். எவ்வளவு தடுப்பூசி இருப்பில் உள்ளது. தடுப்பூசி பாதுகாப்பு நடைமுறைகள், பய னாளிகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இந்த செயலியில் இடம்பெற்றிருக்கும்.
2 லட்சம் பேருக்கு பயிற்சி
இவை அனைத்தும் பிரதமர் தலைமையில் நடைபெற்ற உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்தில் முழுமை யாக விவாதிக்கப்பட்டன. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வரும் 14, 15-ம் தேதிகளில் பொங்கல், மகர சங்கராந்தி, லோக்ரி, மாக் பிஹு உள்ளிட்ட பண்டிகைகள் கொண்டாடப் பட உள்ளன. இந்த பண்டிகைகள் முடிந்து வரும் 16-ம் தேதி கரோனா தடுப்பூசி போடும் பணியைத் தொடங்க கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.
30 கோடி பேருக்கு..
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா தடுப்பூசி போடும் பணிக்காக இதுவரை மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்து முழு திருப்தி தெரிவித்தார். நாடு முழுவதும் ஜனவரி 16-ம் தேதி தடுப்பூசி பணி தொடங்கும். முதல்கட்டமாக சுகாதார ஊழியர்கள், முன்கள பணியாளர்கள் 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும். மேலும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், 50 வயதுக்கு கீழ் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என 27 கோடி பேருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்கள ஊழியர்களுக்கு முன்னுரிமை
பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "கரோனா வைரஸுக்கு எதிரான போரில் மிக முக்கிய நடவடிக்கை எடுக்கப் பட்டிருக்கிறது. நாடு முழுவதும் வரும் 16-ம் தேதி தடுப்பூசி போடும் பணி தொடங்கும். டாக்டர்கள், சுகாதார ஊழியர்கள், முன்கள ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.செரம் இன்ஸ்டிடியூட், பாரத் பயோ டெக் நிறுவனங்களில் இருந்து விமானங்கள் மூலம் பெருநகரங் களுக்கு கரோனா தடுப்பூசிகள் கொண்டு செல்லப்பட உள்ளன. பெருநகரங்களில் இருந்து விமானங் கள், வாகனங்கள் மூலம் நாடு முழுவதும் தடுப்பூசி விநியோகம் செய்யப்பட உள்ளது.
சென்னை, ஹைதராபாத்தில் இருந்து தென்னிந்தியா முழுவதற்கும் டெல்லி, கர்னாலில் இருந்து வட இந்தியா முழுவதற்கும் கொல்கத்தா, குவாஹாட்டியில் இருந்து கிழக்கு, வடகிழக்கு மாநிலங்களுக்கும் தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்பட உள்ளன. தடுப்பூசிகளை விமானங்கள் மூலம் விரைவாக விநியோகம் செய்ய 41 விமான நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தடுப்பூசிகளை எடுத்துச் செல்ல இந்திய விமானப் படையின் சரக்கு விமானங்கள் தயார் நிலையில் உள்ளன.
'கோ வின்' செயலி
கரோனா தடுப்பூசி போடும் பணிக் காக மத்திய சுகாதாரத் துறை உருவாக்கியுள்ள 'கோ வின்' செயலி விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செயலியில் முன்பதிவு செய்து தனி அடையாள எண்ணை பெற்றுக் கொள்ள வேண்டும். முன்பதிவுக்கு 12 வகையான ஆவணங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். முன்பதிவு செய்தவர் களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தடுப்பூசி போடும் தேதி, இடம், நேரம் குறித்த விவரங்கள் அனுப்பி வைக்கப்படும்.கோவிஷீல்டு, கோவேக்ஸின் ஆகி யவை 2 முறை போட்டுக் கொள்ள வேண்டிய தடுப்பூசிகளாகும். முதல் தடுப்பூசியை போட்ட பிறகு 28 நாட்களுக்குப் பிறகு 2-வது தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும். இந்த தடுப்பூசி 6 மாதங்கள் முதல் 12 மாதங்கள் வரை எதிர்ப்பு சக்தியை வழங்கும் என்று கூறப்படுகிறது.
நாளை ஆலோசனை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT