Published : 24 Nov 2020 03:13 AM
Last Updated : 24 Nov 2020 03:13 AM
‘நிவர்’ புயல் தாக்கம் காரணமாக புதுக் கோட்டை முதல் செங்கல்பட்டு வரை யிலான 7 கடலோர மாவட்டங்களில் இன்று பிற்பகல் முதல் பேருந்து போ்க்குவரத்து நிறுத்தப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். பயணத்தை தவிர்க்கு மாறு மக்களுக்கு முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வங்கக் கடலில் நிலவி வரும் காற் றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக வலுப்பெற்று, நாளை (நவ.25) பிற்பகல், புதுச்சேரி அருகே கரையை கடக்க வாய்ப் புள்ளது. அதன் காரணமாக தமிழக கட லோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் சே.பாலச்சந்திரன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற் றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 510 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மணிக்கு சுமார் 15 கி.மீ. வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இது, இன்று ‘நிவர்’ புயலாக மாறி, அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுவடையக்கூடும்.
புயலுக்கான கண் பகுதி உருவாகவி ல்லை. அது உருவானால்தான் கரையை கடக்கும் சரியான இடத்தை கூறமுடியும். தற்போதைய நிலவரப்படி, வடமேற்கு திசையில் நகர்ந்து, 25-ம் தேதி பிற்பக லில் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மழை பெய்யக்கூடும்.
கடலோர மாவட்டங்களில் நாளை மணிக்கு 80-லிருந்து 90 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 100 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும். 25-ம் தேதி புயல் கரையைக் கடக்கும் பகுதிகளில் மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்தில், இடையிடையே 120 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். 24, 25 தேதிகளில் தமிழக கடலோரப் பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். கடல் அலை வழக்கத்தைவிட 2 மீட்டர் வரை உயரக்கூடும். மீனவர்கள் 25-ம் தேதி வரை தமிழக கடல் பகுதிகளில் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
தீவிர புயல் உருவாக இருப்பதை யொட்டி தமிழக கடலோரப் பகுதிகளில் உள்ள 11 துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
முதல்வர் ஆலோசனை
புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் பழனி சாமி தலைமையில் நேற்று நடந்தது. முன்னதாக, தலைமைச் செயலர் கே.சண் முகம் தலைமையில் நாகை, திருவாரூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.ஆய்வுக்கூட்ட முடிவில் முதல்வர் வெளியிட்ட அறிக்கை:
‘நிவர்’ புயல் நவ.25-ம் தேதி மாலை புதுச்சேரி அருகில் கரையை கடக்கும் போது மிக கனமழையுடன், 120 கி.மீ. வேகத் தில் புயல் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதை முன்னிட்டு வருவாய், உள் ளாட்சி, தீயணைப்பு, பொதுப்பணி, நெடுஞ் சாலை, நகராட்சி, மின்சார வாரியம், சுகாதாரம் மற்றும் பிற துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் அடங்கிய மீட்புக் குழுவினர், நவ.23-ம் தேதி மாலையில் இருந்து ஜேசிபி, லாரி, மின்சார மரம் அறுக்கும் இயந்திரங்கள், மணல் மூட்டைகள் மற்றும் போதுமான மின் கம்பங்களுடன் பாதிப்பு உள்ளாகக் கூடிய பகுதிகளில் முகாமிட வேண்டும். கண்காணிப்பு அதிகாரிகளும் அந்த மாவட்டங்களில் முகாமிட வேண்டும்.
l பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளிலும் பாதுகாப்பில்லாத வீடுகளிலும் வசிக் கும் மக்களை நிவாரண முகாம்களுக்கு உடனே அழைத்துச் செல்ல வேண்டும். நிவாரண முகாம்களில் மின்வசதி, குடிநீர், கழிவறை, சமையலுக்கு தேவை யான பொருட்கள், சமையலர்கள் உள்ளிட்ட வசதிகள் செய்ய வேண்டும்.
l முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப் புரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இடையிலும், மாவட்டங்களுக்குள்ளும் நவ.24-ம் தேதி (இன்று) மதியம் முதல் மறுஉத்தரவு வரும்வரை பேருந்து போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படுகிறது. பொதுமக்களும், சொந்த வாகனங்களில் அத்தியாவசிய தேவை தவிர மற்றவற்றுக்காக பயணிப்பதை தவிர்க்க வேண்டும்.
l பெரிய ஏரிகளின் கொள்ளவு, பாது காப்பை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஏரிகள், நீர்நிலைகளையும் உடைப்பு ஏற்படாமல் கண்காணிக்க வேண்டும்.
l நேரடி நெல் கொள்முதல் நிலையங் களில் நெல் மூட்டைகள் நனையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கால் நடைகளுக்கு தேவையான தடுப்பூசி கள், மருந்து, தீவனத்தை போதிய அளவு இருப்பு வைக்க வேண்டும்.
l பாதிக்கப்படும் பகுதிகளுக்கு கூடுத லாக 1,000 மின் பணியாளர்கள், மின் கம்பங்கள், மின் கடத்திகளை அனுப்பி வைக்க வேண்டும்.
l கரோனா பாதிப்பு ஏற்படாமல் தடுக்க அனைத்து நிவாரண முகாம்களிலும் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
l தேசிய பேரிடர் மீட்புப் படையின் 6 பிரிவுகளை கடலூரிலும், 2 பிரிவு களை சென்னையிலும், தேவையான கருவிகளுடன் தங்க வைக்க வேண்டும்.
l பெட்ரோல், டீசலை போதிய அளவு இருப்பு வைக்க சம்பந்தப்பட்ட நிறு வனங்களை அறிவுறுத்த வேண்டும்.
l பெரும் மழையும், புயலும் வீச இருப் பதால், எச்சரிக்கை விடப்பட்ட மாவட்டங்களில் 24, 25 தேதிகளில் மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
l பேட்டரி டார்ச் லைட்கள், பேட்டரிகள், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி ஆகியவை போதிய அளவுக்கு வைத்திருக்க வேண்டும். வீடுகளில் மின்சாதனப் பொருட்களை கவனமாக கையாள வேண்டும்.
இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
ரயில்கள் ரத்து
புயல் காரணமாக மயிலாடுதுறை - தஞ் சாவூர் இடையே இயக்கப்பட்டு வந்த பய ணிகள் ரயில் சேவை 24, 25 தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதிகனமழை, மிக கனமழை பெய் யக்கூடிய மாவட் டங்களில் தீயணைப்பு வீரர்கள், மீட்பு மற் றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளனர்.அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீ்ட்பு படையின் 9 குழுக்கள், உரிய மீட்புக் கருவிகளுடன் கடலோர மாவட்டங்களுக்கு விரைந்துள்ளன.
தமிழகத்தில் 3 நாட்கள் அதிகனமழை பெய்யும்
‘நிவர்’ புயலால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு அதிகனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய அதிகனமழை பெய்யக் கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், இதர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
25-ம் தேதி நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ,திருவண்ணாமலை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிகனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, கரூர், செங்கல்பட்டு ,காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும்.
26-ம் தேதி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய வட மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும். 27-ம் தேதி தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில், பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT