Published : 22 May 2023 08:06 PM
Last Updated : 22 May 2023 08:06 PM

இந்தியாவில் BGMI-க்கு தடை நீக்கம்: கூகுள் பிளே ஸ்டோரில் இந்திய பப்ஜியை டவுன்லோட் செய்யலாம்?

பிரதிநிதித்துவப் படம்

சென்னை: இந்தியாவில் Battlegrounds Mobile India (BGMI) மொபைல் போன் கேம் மீண்டும் கூகுள் பிளே ஸ்டோரில் டவுன்லோட் செய்ய கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு அந்த செயலியின் மீது தடையை நீக்கிய நிலையில் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிஜிஎம்ஐ கேமின் வடிவமைப்பாளரான கிராஃப்டான் நிறுவனம் தடையை நீக்கிய இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்தது. இந்நிலையில், மூன்றே நாட்களில் இந்த செயலி மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

கடந்த 2020 வாக்கில் பாதுகாப்பு காரணங்களுக்காக சீன தேச செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது. அதில் பரவலாக பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்பட்டு வந்த பப்ஜி மொபைல் கேமும் அடங்கும். தொடர்ந்து அதற்கு மாற்று எப்போது அறிமுகமாகும் என்ற எதிர்பார்ப்பு பயனர்கள் மத்தியில் எகிறி இருந்தது.

அத்தகைய சூழலில் தென் கொரியாவை சேர்ந்த வீடியோ கேம் வடிவமைப்பு நிறுவனமான கிராஃப்டான், Battlegrounds Mobile India என்ற கேமை வடிவமைத்தது. இதனை கடந்த 2021 ஜூலை வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. அதே நேரத்தில் இதனை இந்திய நாட்டுக்கான புதிய பப்ஜி வெர்ஷன் என பலரும் சொல்லி வந்தனர்.

இந்த செயலி அறிமுகமானது முதல் பலரும் அதனை ஆர்வமுடன் டவுன்லோடு செய்து, தங்கள் போனில் இன்ஸ்டால் செய்து, விளையாடி வந்தனர். இந்நிலையில், இந்த செயலி கடந்த ஆண்டு கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது.

இந்த சூழலில் இந்திய அரசு தடையை நீக்கியதை தொடர்ந்து தற்போது இந்த செயலி மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இருந்தாலும் இப்போதைக்கு இது நேரடியாக கூகுள் பிளே ஸ்டோரில் பயனர்களால் டவுன்லோட் செய்ய முடியவில்லை. பிஜிஎம்ஐ தளத்திற்கு சென்று, அதில் உள்ள பிளே ஸ்டோர் பட்டனை கிளிக் செய்து இந்த செயலியை டவுன்லோட் செய்யலாம். இருந்தாலும் தற்போது எர்ரர் என வருவதாக தகவல். சில நிபந்தனைகளுடன் செயலி மீதான தடையை அரசு திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x