Published : 16 May 2023 07:57 PM
Last Updated : 16 May 2023 07:57 PM

'சாட் லாக்' அம்சத்தை அறிமுகம் செய்த வாட்ஸ்அப்: பயனர்கள் சாட்களை லாக் செய்வது எப்படி?

பிரதிநிதித்துவப் படம்

சான் பிரான்சிஸ்கோ: வாட்ஸ்அப் மெசஞ்சர் தளத்தில் சாட்களை லாக் செய்யும் ‘லாக் சாட்’ அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் தனிப்பட்ட சாட்களை லாக் செய்து கொள்ளலாம். கடந்த மாதம் இது குறித்த தகவல் வெளியான நிலையில் வாட்ஸ்அப் தற்போது இந்த அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.

தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் ‘லாக் சாட்’ அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் செயலியில் தனிப்பட்ட சாட்களை லாக் செய்யலாம். பயனர்களின் பிரைவசியை உறுதி செய்ய இந்த அம்சம் உதவும் என தெரிகிறது. லாக் செய்யப்பட்ட சாட்களுக்கு அனுப்பிய அல்லது பெற்ற ஆடியோ, வீடியோ, படங்கள் மற்றும் கோப்புகள் என எந்தவொரு மீடியாவையும் பயனரை தவிர வேறு யாரும் பார்க்க முடியாது. தனியொரு ஃபோல்டரில் இருக்கும் இந்த சாட்களை அக்சஸ் செய்ய பயோமெட்ரிக் அல்லது பாஸ்வேர்டு உள்ளிட வேண்டும்.

பயனர்கள் சாட்களை லாக் செய்வது எப்படி?

  • ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் இயங்குதள போன் பயனர்கள் இந்த அம்சத்தை பயன்படுத்தலாம்.
  • முதலில் பயனர்கள் வாட்ஸ்அப் செயலியை தங்கள் போனில் அப்டேட் செய்ய வேண்டும்.
  • பின்னர் வாட்ஸ்அப் செயலியை ஓபன் செய்து லாக் செய்ய விரும்பும் கான்டக்ட் அல்லது குரூப்பை ஓபன் செய்ய வேண்டும்.
  • அந்த கான்டக்ட் அல்லது குரூப்பின் பெயர் அல்லது ஃப்ரொபைல் படத்தை க்ளிக் செய்ய வேண்டும்.
  • அதில் ஸ்க்ரால் செய்தால் ‘Disappearing Message’ மெனுவுக்கு கீழ் புறம் ‘சாட் லாக்’ எனும் ஆப்ஷன் இருக்கும். அதன் மூலம் பயனர்கள் அந்த சாட்களை லாக் செய்யலாம்.
  • இப்போதைக்கு இந்த அம்சம் படிப்படியாக பயனர்களின் பயன்பாட்டுக்கு அறிமுகமாகி வருவதாக தெரிகிறது. பயனர்கள் வாட்ஸ்அப் செயலியின் லேட்டஸ்ட் வெர்ஷனை அப்டேட் செய்து இதை தெரிந்து கொள்ளலாம்.

வீடியோ லிங்க்..

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x