Published : 10 May 2023 02:34 PM
Last Updated : 10 May 2023 02:34 PM

வாட்ஸ்அப்பில் மோசடி அழைப்புகள்: '+84, +62, +60' என்ற கோடில் தொடங்கும் அழைப்புகளை எடுக்க வேண்டாம்

பிரதிநிதித்துவப் படம்

சென்னை: வாட்ஸ்அப் மெசேஞ்சர் தளத்தை மீண்டும் டார்கெட் செய்துள்ளனர் மோசடி ஆசாமிகள். '+84, +62, +60, +234' மற்றும் பல நாடுகளின் கோடில் இருந்து அழைப்புகள் மற்றும் மெசேஜ்கள் வருவதாக பயனர்கள் ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் புகார் தெரிவித்துள்ளனர். இதிலிருந்து பயனர்கள் தற்காத்துக் கொள்வது எப்படி என்பதை பார்ப்போம்.

கடந்த காலங்களில் இதற்கு முன்னதாக இதே போல மோசடிகளுக்கு வாட்ஸ்அப் தளம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த தளத்தின் மூலம் பயனர்களை தொடர்பு கொள்வது எளிது. அதன் ஊடாக தங்கள் கைவரிசையை மோசடி பேர்வழிகள் காட்டிவிடுவார்கள். இந்த நிலையில் மாதந்தோறும் சுமார் 2 பில்லியன் ஆக்டிவ் பயனர்களை கொண்டுள்ள வாட்ஸ்அப் தள பயனர்கள் மீண்டும் மோசடி அழைப்புகளை பெற்று வருகின்றனர்.

இப்போதைக்கு மலேசியா, வியாட்நம், நைஜீரியா, கென்யா, எத்தியோப்பியா போன்ற நாடுகளின் கோடில் இருந்து இந்த அழைப்புகள் வருவதாக தெரிகிறது. இது ஏன் வருகிறது என்பது தெரியவில்லை. சிலருக்கு வேலைவாயப்பு சார்ந்த மெசேஜ்களும் வருகின்றன. அதனால் பயனர்கள் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

இதிலிருந்து தப்பிப்பது எப்படி?

தெரியாத எண்ணில் இருந்து வரும் அழைப்புகளை வாட்ஸ்அப் பயனர்கள் தவிர்த்து விடலாம். அதே போல தெரியாத எண்களில் இருந்து வரும் மெசேஜ்கள், அதில் இருக்கும் லிங்குகளை ஓபன் செய்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இதில் ரிப்ளை அல்லது லிங்குகளை ஓபன் செய்தால் பயனர் தகவல் மட்டுமல்லாது இணைய வழியில் பணம் களவு போகலாம்.

பயனர்கள் தங்களுக்கு தெரியாத அல்லது சந்தேகத்திற்கு இடம் கொடுக்கும் எண்களை பிளாக் செய்து, வாட்ஸ்அப்பில் ரிப்போர்ட் செய்யலாம் என வாட்ஸ்அப் மெசேஞ்சர் தளம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x