Published : 15 Apr 2023 09:50 AM
Last Updated : 15 Apr 2023 09:50 AM
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் Asus நிறுவனத்தின் ROG போன் 7 சீரிஸ் அறிமுகமாகி உள்ளது. தற்போது இந்த சீரிஸில் இரண்டு போன்களை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இரண்டுமே 5ஜி போன்களாகும். இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம்.
தைவானை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் நிறுவனம் Asus. டெஸ்க்டாப் கம்யூட்டர், லேப்டாப், மொபைல் போன்களை இந்த நிறுவனம் வடிவமைத்து வருகிறது. கடந்த 2018 முதல் Asus சார்பில் ROG சீரிஸ் போன்கள் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் ROG போன் 7 சீரிஸ் வரிசையில் ROG போன் 7 மற்றும் ROG போன் 7 அல்டிமேட் போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் கேமிங் பிரியர்களைக் கவரும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ROG போன் 7 சீரிஸ் பொதுவான அம்சங்கள்
இந்த இரண்டு போன்களும் பொதுவான அம்சங்களை கொண்டுள்ளன. அது குறித்து பார்ப்போம்.
ஆக்டிவ் கூலிங் ஃபேன் அக்சஸரி: ROG போன் 7 அல்டிமேட் போன் விலை சற்றே கூடுதலாக உள்ளது. அதற்கு காரணம் இந்த போனுடன் ஆக்டிவ் கூலிங் ஃபேன் அக்சஸரி வழங்கப்படுகிறது. இது போனின் வெப்பத்தை தணிக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதோடு ஐபி54 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெஸிஸ்டன்ஸ் கொண்டுள்ளது. 3.5mm ஹெட்போன் ஜேக்கை இந்த போன் கொண்டுள்ளது.
விலை: 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் திறன் கொண்ட ROG போன் 7 மாடலின் விலை ரூ.74,999. அதுவே 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் திறன் கொண்ட ROG போன் 7 அல்டிமேட் மாடலின் விலை ரூ.99,999.
Launching the #ROGPhone7series a flagship gaming smartphone with the latest Qualcomm® Snapdragon® 8 Gen 2 Mobile Platform and a massive 6000 mAh split battery, this gaming legend equips you with invincible power and speed for long-lasting gameplay even after work happened.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT