Published : 11 Apr 2023 12:16 PM
Last Updated : 11 Apr 2023 12:16 PM
மைசூரு: இன்றைய டெக் யுகத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) குறித்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதுவும் ஜெனரேட்டிவ் ஏஐ பாட்களின் வருகைதான் இதற்கு மிக முக்கிய காரணம். படம் வரைய, கட்டுரை எழுத, தகவல்கள் தெரிந்து கொள்ள, கோடிங் அடிக்க என பல்வேறு வேலைகளை இந்த ஜெனரேட்டிவ் ஏஐ பாட்கள் சுலபமாக மேற்கொள்கின்றன.
பலரும் இதன்மூலம் தங்கள் கற்பனைகளுக்கு உயிர் கொடுத்து வருகின்றனர். விண்வெளியில் குதிரையில் பயணிக்கும் விண்வெளி வீரர், சதுரங்கம் விளையாடும் ரோபோ என இணைய பயனர்கள் தங்கள் கற்பனைக்கு ஏற்ப படங்களை ஏஐ துணைக் கொண்டு ஜெனரேட் செய்ய முடிகிறது. தற்போது இப்படி படம் உருவாக்குபவர்களை ஏஐ ஆர்ட்டிஸ்ட் என சொல்கின்றனர்.
அந்த வகையில் கோகுல் பிள்ளை எனும் பயனர் ஒருவர், ‘உலக பணக்காரர்கள் வறியவர்களாக இருந்தால் எப்படி இருக்கும்?’ என்ற யோசனையில் அது சார்ந்த படங்களை ஏஐ மூலம் உருவாக்கியுள்ளார். மிட் ஜேர்னி எனும் தளத்தை இதற்காக அவர் பயன்படுத்தி உள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப், பில்கேட்ஸ், முகேஷ் அம்பானி, மார்க் ஸூகர்பெர்க், வாரன் பஃபெட், ஜெஃப் பெசோஸ் மற்றும் எலான் மஸ்க் ஆகியோரது படங்களை அவர் ரீ-இமேஜின் செய்துள்ளார். அது பார்க்க மிகவும் வேடிக்கையாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT