Published : 04 Apr 2023 01:18 PM Last Updated : 04 Apr 2023 01:18 PM
ஒன்பிளஸ் முதல் விவோ வரை: ஏப்ரல் மாதம் இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ள ஸ்மார்ட்போன்கள்!
சென்னை: உலகில் செல்போன் வடிவமைக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவாகி உள்ளது. இந்த சூழலில் நடப்பு ஏப்ரல் மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ள ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்ப்போம். போக்கோ, ஒன்பிளஸ், அஸுஸ், விவோ, iQOO போன்ற முன்னணி நிறுவனங்களின் போன்கள் அறிமுகமாக உள்ளன.
இந்த போன்களின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
போக்கோ F5: இந்தியாவில் வெகு விரைவில் போக்கோ F5 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ரெட்மி நோட் 12 போனின் ரீ-பிரேண்ட் செய்யப்பட்ட போன் என தெரிகிறது. 6.67 இன்ச் QHD+ AMOLED பேனல் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 7+ ஜெனரேஷன் சிப்செட் போன்ற அம்சங்களை இந்த போன் கொண்டிருக்கும் என தெரிகிறது.
ஒன்பிளஸ் நார்ட் CE 3 லைட்: இன்று (ஏப்ரல் 4) மாலை இந்த போன் அறிமுகமாகிறது. 6.72 இன்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 695 சிப்செட், பின்பக்கத்தில் 3 கேமரா உட்பட பல்வேறு அம்சங்களை இந்த போன் கொண்டுள்ளது.
அஸுஸ் ரோக் போன் 7: இது கேமிங் ஸ்மார்ட்போன் என தெரிகிறது. இந்த போன் வரும் 13-ம் தேதி அறிமுகமாக உள்ளதாக தகவல். ஸ்னாப்டிராகன் 8 ஜெனரேஷன் 2 சிப்செட்டை இந்த போன் கொண்டிருக்கும் என தெரிகிறது.
விவோ: விவோ நிறுவனம் சார்பில் எக்ஸ்90 சீரிஸ் போன்களில் எக்ஸ்90 புரோ மாடல் அறிமுகமாகும் என தெரிகிறது. ஸ்னாப்டிராகன் 8 ஜெனரேஷன் 2 சிப்செட்டை இந்த ஹை-எண்ட் மாடல் கொண்டிருக்கும் என தெரிகிறது. அதே போல டி சீரிஸ் போன்களில் டி2 வரிசை போன்களை விவோ அறிமுகம் செய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
iQOO நிறுவனம் சார்பில் iQOO Z7x ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என தெரிகிறது. இது அந்த நிறுவனத்தின் Z7 மற்றும் Z6 மாடல் போன்களின் வரிசையில் அடுத்து வரும் போனாக இருக்கும் என தெரிகிறது.
WRITE A COMMENT