Published : 10 Mar 2023 07:47 PM
Last Updated : 10 Mar 2023 07:47 PM

தேவையற்ற குழுக்களை நீக்க வாட்ஸ்அப் பயனர்களுக்கு உதவும் புதிய அம்சம்: விரைவில் அறிமுகம்?

கோப்புப்படம்

சான் பிரான்சிஸ்கோ: வாட்ஸ்அப் மெசேஞ்சர் தளத்தில் பயனர்கள் தாங்கள் பயன்படுத்தாத குழுக்களை நீக்க புதிய அம்சம் ஒன்று வெகு விரைவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போன் ஸ்டோரேஜ் மெமரியை சேமிக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.

வாட்ஸ்அப் மெசேஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.

தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் ‘Expiring குரூப்ஸ்’ என்ற அம்சம் இந்த தளத்தில் அறிமுகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வாட்ஸ்அப் குறித்த மேம்பாடுகளை பின்தொடர்ந்து வரும் Wabetainfo தெரிவித்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் தாங்கள் பயன்படுத்தாத வாட்ஸ்அப் குழுக்களை அடையாளம் கண்டு நீக்கலாம் என தெரிகிறது.

உதாரணமாக, இன்றைய டெக் யுகத்தில் பிறந்தநாள், திருமணம், ட்ரீட் போன்றவற்றை நண்பர்கள், உறவினர்களுக்கு மத்தியில் நினைவுப்படுத்தும் விதமாக வாட்ஸ்அப்பில் குழுக்கள் உருவாக்குவது உண்டு. அதன் தேவை முடிந்த பின்னர் அந்த குரூப் அப்படியே பயன்படுத்தப்படாமல் ஆக்டிவாக இருக்கும். அதில் எந்தவொரு மெசேஜும் இருக்காது. அதனால் போனின் ஆப் ஸ்பேஸ் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கும். அதை நீக்க இந்த புதிய அம்சம் உதவுமாம்.

இதன்மூலம் பயனர்கள் எந்த தேதியில் அந்த குழுவை தங்கள் பயன்பாட்டில் இருந்து நீக்கலாம் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ள முடியுமாம். அதனை நாள், வாரம், மாத கணக்கில் நிர்ணயிக்க முடியுமாம். குழு காலாவதியாகும் தேதி வந்ததும் பயனர்களுக்கு நோட்டிபிகேஷன் வருமாம். அதன் அடிப்படையில் பயனர்கள் அந்த குழு குறித்த இறுதி முடிவை எடுக்க முடியும். இப்போதைக்கு இது டெவலெப்மென்ட் நிலையில் இருப்பதாக தகவல்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x