Published : 17 Feb 2023 09:02 PM
Last Updated : 17 Feb 2023 09:02 PM
சென்னை: இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறது ஓடிடி தளங்கள். திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள், ஆவணப்படங்கள், மெகா சீரியல்கள், நேரலை விளையாட்டு நிகழ்வுகளை ஒளிபரப்புகிறது ஓடிடி சேவை வழங்கும் நிறுவனங்கள். இந்தியாவில் இந்த சேவையை வழங்கும் முதன்மையான நிறுவனங்களில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளமும் ஒன்று.
குறிப்பாக கிரிக்கெட் போட்டிகள் நேரலையில் ஸ்ட்ரீம் செய்யும் தளம் என்பதால் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலம். அது தவிர ஸ்டார் நெட்வொர்க் கன்டென்ட்கள் இதில் அதிகம் கிடைக்கும். இந்திய அணி கிரிக்கெட் விளையாடினால் நிகழ்நேரத்தில் பல மில்லியன் பார்வைகளை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் பெறும். அதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து பலரும் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்வார்கள்.
இந்தச் சூழலில்தான் இன்று (பிப்.17) டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சேவை பாதிக்கப்பட்டது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்றுதான் துவங்கியது. இந்தப் போட்டியை டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் பார்க்க முடியும். போட்டி நடந்த போதுதான் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சேவையில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து முடங்கிய தளங்கள் குறித்த தகவலை வெளியிடும் டவுன்டிட்டக்டர் தளத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட புகார்களை பயனர்கள் தெரிவித்துள்ளனர். தங்களால் வலைதளம், செயலி என எதிலும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரை பயன்படுத்த முடியவில்லை எனவும். வீடியோ ஸ்ட்ரீம் ஆகவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், தடங்கல் உடன் கூடிய இந்த சேவையை பெறதான் நாங்கள் சந்தா கட்டினோமா என பயனர் ஒருவர் ட்விட்டரில் கேள்வியை எழுப்பினார். மறுபக்கம், நல்ல வேளையாக ஜியோ டிவி மூலமாக ஆஸ்திரேலியா - இந்தியா போட்டியை பார்க்க முடிந்ததாகவும் பயனர்கள் தெரிவித்திருந்தனர். சிலர் மீம் போட்டு கலாய்த்தனர். இப்போது ஹாட்ஸ்டார் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக தகவல்.
Abay saalo aaj he ₹1499 deke renew karaya tha...aaj he down hona tha.
#Hotstar#hotstar pic.twitter.com/GPbHIihWZC— Rohit (@Rohit_p__) February 17, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT