Published : 03 Feb 2023 04:18 PM
Last Updated : 03 Feb 2023 04:18 PM

இந்திய சந்தையில் ஒப்போ ரெனோ 8T 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

ஒப்போ ரெனோ 8T 5ஜி

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ நிறுவனம் ரெனோ 8T ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். ரெனோ 8 சீரிஸ் வரிசையில் இந்த போன் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வரும் சீன தேச நிறுவனங்களில் ஒன்று ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு என இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் காரணமாக அவ்வப்போது புதுப்புது மாடல்களை ஒப்போ அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் இப்போது ஒப்போ நிறுவனத்தின் சார்பில் ரெனோ 8T ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்

  • 6.7 இன்ச் AMOLED ஸ்க்ரீன்
  • Curved டிசைனில் இந்த போன் வெளிவந்துள்ளது
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட்
  • 108 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
  • 32 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • 8ஜிபி ரேம்
  • 128ஜிபி ஸ்டோரேஜ்
  • ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்
  • 4,800mAh திறன் கொண்ட பேட்டரி
  • 67 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் திறன் கொண்டுள்ளது
  • வரும் 10-ம் தேதி முதல் இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும் இந்த போனின் விலை ரூ.29,999

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x