Published : 28 Dec 2022 09:49 PM
Last Updated : 28 Dec 2022 09:49 PM

இந்திய ரயில்வே தரவுகள் கசிவு? விற்பனைக்கு வந்த 3 கோடி பயணிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்..

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி: சுமார் 3 கோடி இந்திய ரயில் பயணிகளின் தரவுகள் டார்க் வெப் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் பயணிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும் இதுகுறித்து அரசு தரப்பிலோ அல்லது ரயில்வே தரப்பிலோ இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இருந்தாலும் ஹேக்கர் ஒருவர் பயணிகளின் தரவுகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளதாக தகவல்.

ஷேடோ ஹேக்கர் என்ற பெயரில் இந்த தரவு கசிவு குறித்து பதிவு ஒன்று டார்க் வெப்பில் பகிரப்பட்டுள்ளது. அந்த பதிவின்படி டிச.27-ம் தேதி இந்த தரவுகள் கசிந்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து சைபர் பாதுகாப்பு நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டி உள்ளது.

பயணிகளின் பயண விவரம் மற்றும் இன்வாய்ஸ் போன்றவையும் இதில் கசிந்துள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இந்த நகல் ஒன்றுக்கு சுமார் 400 அமெரிக்க டாலர்கள் வீதம் வசூலிப்பதாகவும் தகவல். கடந்த 2019-ல் இதே போல் சுமார் 9 மில்லியன் மக்களின் தரவுகள் ஆன்லைனில் கசிந்திருந்தன. இதை தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் அவை அனைத்தும் தகர்க்கப்பட்டு வருகிறது. தனிநபர்கள் தங்கள் விவரங்களை ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் பகிரும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் புதுப்புது யுக்திகளில் ஹேக்கர்கள் தங்கள் கைவரிசையை வெளிக்காட்டி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x