Published : 05 Dec 2016 12:01 PM
Last Updated : 05 Dec 2016 12:01 PM
முட்டை வடிவிலான சிறிய பேப்பர் வெயிட் இது. உருட்டி விட்டாலும் தானாக நிமிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேஜையின் மேல் அழகு பொருளாகவும், சில்லரை, சிம் கார்டு போன்றவை போட்டு வைக்கவும் பயன்படுத்தலாம்.
மடக்கும் ஹாங்கர்
உடைகளை மடித்து வைப்பதைவிட ஹாங்கரில் தொங்கவிடுவதால் தேர்வு செய்வது எளிதாக இருக்கும். ஆனால் வெளியூர் பயணங்களுக்கு ஹாங்கரையும் கொண்டு செல்ல முடியாது. அதற்கு தீர்வாக அமைகிறது இந்த மடக்கும் ஹாங்கர்.
ஸ்மார்ட் ரிமோட்
செவன்ஹக்ஸ் என்கிற இந்த சின்ன ரிமோட் மூலம் வீட்டில் உள்ள அனைத்து மின்னணு சாதனங்களையும் கட்டுப்படுத்த முடியும். டியூப் லைட் வெளிச்சம் முதல் மியூசிக் சிஸ்டம் ஒலியின் அளவு வரை ஏற்றி இறக்கவும் செய்யலாம்.
தரையில் டைட்டானிக்
டைட்டானிக் கப்பலை போல சீனாவில் உருவாக்கி வருகின்றனர். ஆனால் இந்த கப்பல் கடலுக்கு போகாது. சுற்றுலாவை ஊக்குவிக்கும் விதமாக சென்க்டு என்கிற இடத்தில் கட்டுகின்றனர். இந்த ஊர் கடலிலிருந்து 1200 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ளது. டைட்டானிக் போலவே 882 அடி நீளம், 92 அடி உயரத்தில் உயரத்தில் அமைக்கிறார்கள் டைட்டானிக் கப்பலில் இருந்த அனைத்து அம்சங்களும் இருக்கும். இதற்கு 14.5 கோடி டாலர் செலவாகும் என மதிப்பிட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளில் கட்ட உள்ளனர்.
சூடு தரும் சார்ஜர்
காபி, டீ குடித்துக் கொண்டே வேலை பார்ப்பது பலருக்கு பழக்கம். அத்தகைய நேரங்களில் காபி, டீ சூடு குறைந்தால் அது குடித்தது போலவே இருக்காது. அந்த குறையைப் போக்குகிறது லாவா கிளிப் என்கிற இந்த சிறிய கருவி. பேப்பர் வெயிட் போல இருக்கும் இதில் வைத்தால் சூடு குறையாமல் இருக்கும். இதனைக் கொண்டு செல்போனுக்கும் சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம். கையடக்கமாக இருப்பதால் பாக்கெட்டில் வைத்தும் எடுத்துச் செல்லலாம். பயணங்களில் இது வெகுவாக பயன்படும். சார்ஜ் ஏற்றி பயன்படுத்த வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT