Published : 16 Dec 2016 04:39 PM
Last Updated : 16 Dec 2016 04:39 PM
தினமும் அதிகாலையில் கண் விழிப்பது சிறந்தது. இந்தப் பழக்கம் சுறுசுறுப்பை அளிப்பதோடு மேலும் பல நற்பலன்களை அளிக்கக்கூடியது. வெற்றிகரமான மனிதர்கள் பலர் அதிகாலையில் தங்கள் நாட்களைத் தொடங்கும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.
காலையில் கண் விழிப்பது தொடர்பாக இன்னும் ஊக்கம் தரும் தகவல்கள் தேவை எனில், இவற்றை அழகிய தகவல் வரைபடமாக ‘கேஷ்நெட் யு.எஸ்.ஏ’ எனும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தத் தகவல் வரைபடத்தில் காலையில் சீக்கிரம் கண் விழிக்கும் பழக்கத்தால் ஏற்படக்கூடிய பலன்கள் அறிவியல் நோக்கில் விவரிக்கப்பட்டுள்ளன.
இந்தத் தகவல்களை அறிந்துகொண்ட பின் அதிகாலையில் துயிலெழும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள விரும்பினால், அதற்கு உதவக்கூடிய வழிகளும் இந்தத் தகவல் வரைபடத்தில் இரண்டாம் பகுதியாக இடம்பெற்றுள்ளன.
மேலும் விவரங்களுக்கு: >http://designtaxi.com/news/389968/Infographic-How-To-Wake-Up-Early-Every-Morning
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT