Published : 08 Dec 2022 09:55 PM
Last Updated : 08 Dec 2022 09:55 PM
தொழில்நுட்ப வளர்ச்சியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் மோசடி பேர்வழிகள் அதன் ஊடாக குற்ற செயல்களை செய்வது வழக்கம். இது சைபர் குற்றமாக அறியப்படுகிறது. இந்நிலையில், சைபர் கிரைம் சந்தைகளில் பொதுவாகவே கிடைக்கும் பயனர் தரவுகளில் சுமார் 12 சதவீதம் இந்தியர்களுடையது என நார்ட் விபிஎன் தெரிவித்துள்ளது.
பயனர்களின் தரவுகள் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணும் வகையில் பாஸ்வேர்டு, நிதி சார்ந்த தகவல் மற்றும் பயனர்களின் சாதனத்தில் ஸ்டோர் செய்து வைத்துள்ள விவரங்கள் வரை இதில் கிடைப்பதாகவும் விபிஎன் சேவையை வழங்கி வரும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுவும் 500 ரூபாய்க்கு இந்த தகவல் கிடைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்படி கிடைக்கும் தகவல்கள் அவ்வப்போது அப்டேட் ஆகிறது எனவும் சொல்லப்பட்டுள்ளது. பயனர்களின் சாதனத்தில் உள்ள மால்வேர் ஆக்டிவாக இருக்கும் வரையில் இந்த அப்டேட் கிடைக்குமாம். இந்த வகை சந்தைகளில் பழைய தரவுகளுக்கு நல்ல விலை கிடைக்காதாம். அதனால் இந்த அப்டேட் விவரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
நார்ட் விபிஎன் டிராக் செய்ததில் இந்த சந்தைகளில் கிடைக்கும் சுமார் 5 மில்லியன் கணக்கான உலக பயனர் தரவுகள் அடங்கிய டேட்டாபேஸில் இந்தியர்களின் தரவுகள் மட்டும் 6 லட்சத்திற்கும் மேல் உள்ளதாம். இதில் கூகுள், மைக்ரோசாஃப்ட், ஃபேஸ்புக் லாக்-இன் விவரங்களும் அடங்கும் என சொல்லப்பட்டுள்ளது. தரவுகள் அப்டேட் ஆகும் காரணத்தால் டூ-ஃபேக்டர் ஆத்தென்டிகேஷனை கூட தகர்க்க முடியுமாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT