Published : 25 Oct 2022 02:44 PM
Last Updated : 25 Oct 2022 02:44 PM

இயல்பு நிலைக்கு திரும்பியது வாட்ஸ்அப் சேவை: பயனர்கள் மகிழ்ச்சி

கோப்புப்படம்

கலிபோர்னியா: வாட்ஸ்அப் மெசேஞ்சர் சேவை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது. அதன் காரணமாக அந்த தளத்தின் பயனர்கள் குஷியாகி உள்ளனர். உலகம் முழுவதும் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக வாட்ஸ்அப் சேவை முடங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனால் பயனர்கள் செய்வதறியாது தவித்து வந்தனர்.

வாட்ஸ்அப் மெசேஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். இந்த சூழலில்தான் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த பயனர்கள் வாட்ஸ்அப் தள சேவையை பயன்படுத்த முடியாமல் தவித்தனர்.

முடங்கிய வாட்ஸ்அப் சேவையின் சிக்கலை சரி செய்யும் பணி தீவிரமாக மேற்கொண்டு வரப்படுவதாக மெட்டா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார். அவர் சொன்னது போலவே தற்போது அதன் சேவை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. அதன் முடக்கம் இப்போது சீர் செய்யப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் சேவை முடங்கியதை அடுத்து அதனை குறிப்பிடும் வகையில் பயனர்கள் தங்கள் கருத்துகள் சமூக வலைதளமான ட்விட்டர் தளத்தின் வழியே தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக உள்ளூர் தொடங்கி உலக ஊடகம் வரை செய்தி வெளியிட்டிருந்தன. இதன் காரணமாக வாட்ஸ்அப் இப்போது உலக அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x