Published : 04 Oct 2022 06:46 AM
Last Updated : 04 Oct 2022 06:46 AM
புதுடெல்லி: ரிலையன்ஸ் நிறுவனத்தின் தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: நாட்டிலேயே மிகவும் விலை குறைந்த மொபைல்போன்களை விற்பனை செய்து ரிலையன்ஸ் ஜியோ பெரும் வெற்றி கண்டது. அதேபோன்ற வெற்றியை மீண்டும் பெறும் வகையில் ரூ.15,000 (184 டாலர்) விலையில் லேப்டாப்பை ஜியோ அறிமுகப்படுத்தவுள்ளது. ஜியோ அறிமுகப்படுத்தவுள்ள லேப்டாப் "ஜியோபுக்" என்று அழைக்கப்படும். இவ்வகை லேப்டாப்களில் 4ஜி சிம் உள்ளே பொதிக்கப்பட்டிருக்கும். ஜியோஓஎஸ் தளத்தில் செயல்படும் ஜியோபுக்கில் மைக்ரோசாஃப்ட் செயலிகளும் இடம்பெற்றிருக்கும்.
பள்ளிகளுக்கு: பள்ளிகள் மற்றும் அரசுத் துறை நிறுவனங்களில் ஜியோபுக் அறிமுகம் இம்மாதத்தில் இருக்கும். அதேசமயம், அடுத்த மூன்று மாதங்களில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கான லேப்டாப்பை ஜியோ அறிமுகப்படுத்தும். ஜியோபோனை போலவே 5ஜி வசதி கொண்ட போனையும் அறிமுகப்படுத்த ரிலையன்ஸ் ஜியோ திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த 2016-ம் ஆண்டு மலிவான 4ஜி டேட்டா திட்டங்கள் மற்றும் இலவச குரல் சேவை அறிவிப்புகளை வெளியிட்டு மொபைல் சந்தை யில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ உலகின் 2-வது பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது. கடந்தாண்டில் 4ஜி ஜியோ போனை அந்நிறுவனம் அறிமுகப் படுத்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT